நாட்டு நலப்பணி திட்டத்துக்கான செயல்பாடுகளுக்கு, மூன்றாண்டுகளாக நிதிஅளிக்காமல்,
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், விழிப்புணர்வு பணிகளுக்கு
நிதியில்லாமல், திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அரசு பள்ளி
தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவி பெறும்
மேல்நிலைப்பள்ளிகளில், நாட்டுநலப்பணித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த தலா, 25 மாணவர்கள்
உறுப்பினர்களாக உள்ளனர்.
பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்துதல்,
மரக்கன்று நடுதல், சமூக பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
உள்ளிட்ட பணிகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
பள்ளி அருகில் இருக்கும் கிராமத்தை,
மூன்றாண்டுகள் வரை தத்தெடுத்து, சுகாதார பணிகளில் ஈடுபட வேண்டும்.
காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது இதற்கென, ஏழு நாட்கள்
ஒதுக்கப்படும்.இந்நாட்களில் பிளஸ் 1
மாணவர்கள், தத்தெடுத்த கிராமத்தில் தங்கி, துாய்மை பணிகளில் ஈடுபடுவர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, மக்ஏற்படுத்துவர்.
இப்பணிகளுக்காக ஒவ்வொரு மாணவருக்கும் தலா, 220 ரூபாயும், சிறப்பு முகாம்
செலவுக்காக தலா, 450 ரூபாயும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம்
ஒதுக்குகிறது. கோவை மாவட்டத்தில், 71 மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே, நாட்டு
நலப்பணி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
ஆண்டுதோறும் ஒரு பள்ளிக்கு, 11,250 ரூபாய்
ஒதுக்க வேண்டும். மூன்றாண்டுகளாக, சொற்ப தொகையே பள்ளிகளுக்கு
அளிக்கப்பட்டது. இதனால் சொந்த பணத்தை செலவிட்டு விட்டு தவிப்பதாக, பள்ளி
தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர்
கூறுகையில், 'நாட்டுநலப்பணி திட்டத்துக்கு, தற்போது நிதி வந்துள்ளதாக
கூறப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நாங்கள் செலவிட்ட தொகை குறித்து,
எந்த தகவலும் இல்லை' என்றனர்.
நாட்டுநலப்பணி திட்ட பொறுப்பாளர் ஒருவரிடம்
கேட்டபோது, 'மூன்றாண்டுகளாக குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது. கடந்தாண்டு
முற்றிலும் நிதி வரவில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு
தெரியப்படுத்தியுள்ளோம். நடப்பாண்டுக்கான நிதி வந்துள்ளது. விரைவில்,
பள்ளிகளுக்கு பிரித்து அளிக்கப்படும்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...