கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக
நிரப்ப மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து சனிக்கிழமை
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில், 10 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருந்தாலே முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசாங்கத்தின் நடைமுறை விதிகள் உள்ள நிலையில், தற்போது 23 சதவீத பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன.நாடு முழுவதும் புதிதாக 101 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்குவதற்கு சுமார் ரூ.1,600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.577 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.
எனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அதன்கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக முழுமையாகப்பூர்த்தி செய்ய வேண்டும்.மேலும், அந்தப் பள்ளிகளுக்கான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து தர வேண்டும். காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...