டாகோஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் 888 ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபீரிடம்-251 என்னும் ஸ்மார்ட் போன் 251
ரூபாய்க்கு விற்கப்படும் என விளம்பரம் செய்தது. இதற்காக இந்தியா முழுவதும்
வாடிக்கையாளர்கள் பலர் முன் பதிவு செய்தனர். முன்பதிவு செய்யும் போது
இணையதளம் இயங்காமல் போனதால் அந்நிறுவனம் குறித்து
மக்களிடையே பல
சந்தேகங்கள் ஏற்பட்டது. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மோசடி
நிறுவனம் என பாஜக அரசியல் தலைவர் ஒருவர் வழக்கு பதிவு செய்ததும்
குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபீரிடம்-251 ஸ்மார்ட் போன்கள் வருகின்ற மே
மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தற்போது தகவல்
தெரிவித்துள்ளது.இந்நிலையில் Docoss Multimedia என்னும் நிறுவனம் 888 ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு வருகின்ற 29ம் தேதி (நாளை) முதல் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. ஆனால் ஸ்மார்ட் போனை வாடிக்கையாளர்களிடம் வழங்கும் போது மட்டுமே அதற்கான பணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
முன்பதிவு தொடங்கப்பட்ட நான்கு நாட்கள் கழித்து மே மாதம் 2ம் தேதி இந்த ஸ்மார்ட் போன்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நிறுவனத்திற்குரிய இணையதளம் இன்னும் செயல்படவில்லை மேலும் இந்த நிறுவனம் குறிப்பிட்டு இருக்கும் கால்செண்டர்களுக்கான எண்களும் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலும் கடந்த மார்ச் மாதம் தான் இந்த நிறுவனம் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை போன்றே டாக்கோஸ் மல்டிமீடியா நிறுவனத்தின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...