.
ஆசிரியர்களின் நலன் கருதி தேர்தல் மையங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, தமிழக தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக தேர்தல் பணிக்காக நியமிக்கப்படும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு, 50 கி.மீ. தூரத்துக்கு உள்ளாக தேர்தல் பணி ஆணைகளை வழங்க வேண்டும். தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மையத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
போக்குவரத்து இல்லாத பகுதிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் சென்று வர உரிய வாகன வசதி செய்ய வேண்டும். கடந்த தேர்தல்களில் அதிக வெயில் காரணமாக பல ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களின் நலன் கருதி நடமாடும் மருத்துவக் குழுக்களை தேர்தல் மையங்களில் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...