Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சலுகை

      செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வயது வரம்பை தளர்த்தி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது
.செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 14 வயது குழந்தைகள் வரை சேரலாம் என, முன்பு இருந்தது. இனி 15 வயதுவரை கணக்குதுவங்கலாம் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
பெண்குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் கடந்தாண்டு ஜனவரியில் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில் தமிழகத்தில் 12 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும் பலரை சேர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, வயது வரம்பு 15ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அபராத கட்டணம், பணம் செலுத்தாமை போன்றவைகளை தவிர்க்க ஆண்டுதோறும் ரூ.1000 வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு அதற்கான வட்டியும் தரப்படும். கணக்கு வைத்துள்ளவர்கள் இருப்பிடத்தை மாற்றும் போது, கணக்கு முடிக்கப்பட்டு வேறு முகவரிக்கு கணக்கு மாற்றித்தரப்படும்.
ஐந்து ஆண்டு நிறைவு செய்த கணக்குதாரர் நோய்வாய்பட்டாலோ, ஆபத்தான நிலையில் இருந்தாலோ கணக்கு முடிக்கப்பட்டு உறவினர் பெயருக்குமாற்றப்படும். 18 வயது நிறைவடைந்தவர்கள் அல்லது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் தங்களின் சேமிப்பு தொகையில் பாதியை பெற முடியும். 21 வயதிலோ அல்லது திருமணமான ஒரு மாதத்தில் பெண்கள் தங்கள் கணக்கை முடித்துக்கொள்ளலாம். வட்டி விகிதம் 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive