பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், மாணவர்கள்,
பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
கோடை வெயில்
உக்கிரத்திலிருந்து தப்பிக்கவும், விடுமுறையில் வகுப்பறை கல்வியையும்
தாண்டி வெளியுலகை அறிந்து, புரிந்து கொள்ளவும், குடும்ப உறவு மேம்படவும்
மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம் உதவுகிறது.
இந்த உளவியல் அடிப்படையிலேயே, ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.ஆனால், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் சென்டம்ரிசல்ட் பெற வேண்டும் என்பதற்காக, கோடை விடுமுறையிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ௧ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தும் போக்கு, தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது.
மாணவர்களுக்கு நெருக்கடி
அரசுப் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதிய கையோடு, கோடை விடுமுறையை ஜாலியாக கழித்துக் கொண்டு இருக்க, சில தனியார் பள்ளிகள் இப்போதே பிளஸ் ௧ வகுப்பினை ஆரம்பித்து, புத்தகங்களை வாங்குமாறு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளன.
தாறுமாறாக உயர்வு
இதன் காரணமாக, பாடப் புத்தகங்களின் விலை தற்போது பல மடங்கு தாறுமாறாக எகிறியுள்ளது. புக் ஸ்டால்கள் தங்கள் இஷ்டத்திற்கு விலையை உயர்த்தி நிர்ணயித்து, பெற்றோர்களிடம் பணத்தை கறந்து வருகின்றன.கடந்தாண்டு பாடப் புத்தகங்கள் 30 ரூபாய் வரை விலை உயர்த்தி விற்கப்படுகிறது. புதிய புத்தகங்களுக்கு 80 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றன. 100 ரூபாய் மதிப்புள்ள வேதியியல் புதிய பாட நுால்களில் அதிகபட்ச விலை (எம்.ஆர்.பி.,) மறைக்கப்பட்டு, 150 ரூபாய் என குறிப்பிடப் பட்டுள்ளது. அத்துடன், 'ஹாண்டிலிங் சார்ஜ்' என்ற பெயரில் 30 ரூபாய் கூடுதலாக்கி, 180 ரூபாயை பிடுங்கிக் கொள்கின்றனர். ஆனால், எம்.ஆர்.பி., விலைக்கு மட்டுமே பில் கொடுக்கப் படுகிறது.
தண்டம்
தனியார் பள்ளிகளும் 100 சதவீத ரிசல்ட்டிற்காக, ஒவ்வொருமாதிரியான கைடுகளை பரிந்துரைக்கின்றன. மாணவர்கள், அந்த கைடுகளை மட்டுமே வாங்கி படிக்கும் நிலை உள்ளது. ஜூன் மாதம் பள்ளி திறந்த பிறகு, எந்தெந்த பாடத்திற்கு என்ன கைடு வாங்க வேண்டும் என்பதை தனியார் பள்ளிகள் பரிந்துரைக்கும். இதனால், தற்போது கைடு வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டவில்லை.ஆனால் கைடு வாங்கினால்தான் பாடப் புத்தகங்கள் கிடைக்கும் என, புக் ஸ்டால்கள் அடம் பிடிக்கின்றன. இதனால் வேறு வழியின்றி கைடுகளுக்கும் தண்டம் கட்டி, பாடப் புத்தங்களை பெற்றோர் வாங்கிச் செல்கின்றனர்.வெளிச்சந்தையில் பாட புத்தகம் விலையேற்றத்தை தடுக்க, அரசு கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபியில் எம்.ஆர்.பி., விலையில் பாடபுத்தகங்களை விற்பனை செய்ய பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...