Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை: கல்வி

        பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...

கல்வி


கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GSDP)4% ஆக அதிகரிக்கப்படும். அதாவது கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.

மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

 பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளித் தர இயக்குனர் (Director of School Standards) நியமிக்கப்படுவார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு (CBSE) இணையான புதியக் கல்வித் திட்டம் உருவாக்கப்படும். புதியக் கல்வித் திட்டம் 2017 ஆம் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

மாணவர்களின் புத்தக சுமை குறைக்கப்படும். மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டு இ-பேக் (e-bag) என்ற மென்பொருள் மூலம் பாடங்கள் தொகுத்து வழங்கப்படும். இதனால் மாணவர்கள் புத்தகப்பை சுமந்துச் செல்ல வேண்டியிருக்காது.

மாணவர்கள் எளிதாக பள்ளிக்குச் சென்றுவர மாணவர் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9-ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் கணிணி ஆசிரியர்களும், பிற சிறப்பு ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும்  ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வகை செய்யப்படும்.

திறன் சார் கல்வி முறை (Skill Based Education), அறிவுசார் கல்வி முறை, தொழிற்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாக சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.

பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மை  குழுக்களாக (School Management Committee) மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும்.

விளையாட்டு, தொழிற்பயிற்சி, நீதிபோதனை, யோகா பயிற்சி ஆகியவற்றுக்கு அதிக பாட வேலைகள் ஒதுக்கப்படும்.

மாணவர்களுக்கான பேனா முதல் இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டிகள் மற்றும் ஐ-பேட் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இலவச இணைய இணைப்பு தரப்படும்.

மாணவர்களுக்கு ஆண்டுதோ-றும் மருத்துவ ஆய்வு வழங்கப்படும். மருத்துவ ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive