இன்னும், ஓராண்டு கழித்து வரவுள்ள பொதுத் தேர்வு காய்ச்சல்,
பள்ளிகளை ஆட்கொண்டுள்ளதால், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
இருப்பினும், பெரும்பாலான, அரசு, உதவி பெறும், தனியார்
பள்ளிகளில், 9ம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவ, மாணவியருக்கு, 10ம் வகுப்பு
பாடங்களும், 11ம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவர்களுக்கு, 12ம்
வகுப்புக்குரிய பாடங்களும், சிறப்பு வகுப்புகளாக போதிக்கப்பட்டு
வருகின்றன.ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில், “பள்ளிமுழு
ஆண்டு தேர்வுக்கு பின், மாணவ, மாணவியருக்கு ஓய்வு அவசியம்; அப்போது தான்,
அவர்கள் உடல், மன ரீதியாக அடுத்த கல்வியாண்டுக்கு, தங்களை தயார்படுத்திக்
கொள்ள முடியும். கோடை விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தனி யார்,
உதவி பெறும் பள்ளிகள் தான், இதுநாள் வரை வழக்கமாக கொண்டிருந்தன. தற்போது,
அதையே அரசுப் பள்ளிகளும் பின்பற்ற துவங்கியுள்ளன,” என்றார்.
தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார்,
பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ளமனுவில்,“நீலகிரியில் பல
பள்ளிகளில், 11ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில், அரசு,
தனியார் பள்ளிகளில், 12ம் வகுப்புக்குரிய பாடங்கள் முன்கூட்டியே, கோடை
விடுமுறையில் கற்பிக்கப்படுகிறது,” என கூறியுள்ளார்.
இதில், தவறில்லை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தியிடம் கேட்ட
போது,“ஆரம்ப பள்ளிகளுக்கு, வரும், 30ம் தேதி வரை வகுப்புகள் உள்ளன. அதுவரை,
மாணவ, மாணவியரை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், சில பள்ளிகள்
சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன; இதை பெற்றோரே ஊக்குவிக்கின்றனர். இது,
மாணவர்களின் நலன் காக்கும் செயல் தான்; தவறில்லை. சில நாட்களில்,
ஆசிரியர்களும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர் என்பதால், அதன் பிறகு, சிறப்பு
வகுப்புகள் நடக்காது,” என்றார்.
but no schools is following the goverment .private schools have schools till may 10 so goverment must take action on them
ReplyDelete