நாடு முழுவதும் ஒரே மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்
கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால், இட ஒதுக்கீட்டைஅமல்படுத்தும் புதுச்சேரி
மாநிலத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின்
பரிந்துரையின் படி,தேசிய அளவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் பட்டப்
படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்த,சுகாதார துறை முயற்சியை
மேற்கொண்டது.
இது தொடர்பாக,தனியார் மருத்துவக் கல்லுாரிகள் தொடர்ந்த வழக்கில்,அரசின் இந்த முயற்சிக்கு சுப்ரீம் கோர்ட், 2013ல் தடை விதித்தது.இந்த மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,கடந்த2013ல் பிறப்பித்த தடையை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து மீண்டும் விசாரணை நடைபெறும். அது வரை தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம் என கூறியுள்ளது.இதனால் வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.இது,மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தும் புதுச்சேரி மாநிலத்தில்,மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த காலங்களில் நுழைவு தேர்வு மூலம் சென்டாக் மாணவர் சேர்க்கை நடந்தது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து,கடந்த2008ஆம் ஆண்டு தமிழக அரசை பின்பற்றி புதுச்சேரி அரசும்நுழைவு தேர்வினை ரத்து செய்தது.பிளஸ்2மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.தற்போது,பிளஸ்2பொதுத் தேர்வு முடிந்துள்ள சூழ்நிலையில்,மருத்துவ பொது நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் தயாராகவில்லை.இது போன்ற சூழ்நிலையில் திடீரென மத்திய அரசு பொதுத் நுழைவு தேர்வு அறிவிப்பை வெளியிட்டால் புதுச்சேரி மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.புதுச்சேரியில் இட ஒதுக்கீடு கொள்கை காரணமாக குறைந்த மதிப்பெண் எடுத்த பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மாணவர்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்.,படிக்க சீட் கிடைத்து வருகிறது.
உள்ஒதுக்கீடு காரணமாக,முஸ்லிம்,மீனவர்,பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் மாணவர்களும் எம்.பி.பி.எஸ்.,படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.ஆனால்,மருத்துவ பொது நுழைவு தேர்வில்,மாநில அரசுகளின் இந்த இட ஒதுக்கீடு கொள்கை தொடருமா,உள்ஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகைகள் கிடைக்குமா,சென்டாக் கலைக்கப்பட்டு நுழைவு தேர்வு ரிசல்ட் அடிப்படையில் புதுச்சேரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுமா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் இதுவரை விளக்கத்தை அளிக்கவில்லை. இதுபுதுச்சேரி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுமட்டுமின்றி அகில இந்திய மருத்துவ பொது நுழைவு தேர்வுகள் மத்திய அரசின் இடை நிலைக் கல்வி வாரியமான பாடப்புத்தகங்கள் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.
தமிழகத்தின் சமச்சீர் புத்தகங்களை படிக்கும் புதுச்சேரி மாணவர்கள் பொது நுழைவு தேர்வில் சாதிப்பது கடினமான காரியம்.பல ஆண்டுகளுக்காக நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில்,இங்குள்ள1000எம்.பி.பி.எஸ்.,சீட்களுக்கு அகில இந்திய அளவில் புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் போட்டியிட்டு வெற்றி பெறுவது முடியாத காரியம்.எனவே,ஒரே மருத்துவ பொது நுழைவு தேர்வில் புதுச்சேரி அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதோடு,சுப்ரீம் கோர்ட்டினை அணுகி தடையாணை பெற வேண்டும். மத்திய அரசினை அணுகி விலக்கு பெற புதுச்சேரி அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...