முதுநிலை பல்மருத்துவ பட்டம் மற்றும் பட்டயப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு ஏப்.4-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
.இது குறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கர்நாடகத்தில் உள்ள முதுநிலை பல்மருத்துவ பட்டம் மற்றும் பட்டய பயிற்சியில் சேர்ந்து படிக்க ஏற்கெனவே அறிவித்தப்படி இரண்டாவது கலந்தாய்வு முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களுக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு, அகில இந்திய முதுநிலை பல்மருத்துவ நுழைவுத்தேர்வில்(அஐடஎஈஉஉ)தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டவர்களிடம் இருந்து கர்நாடக தேர்வு ஆணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.இத்தேர்வுக்கு இணையதளம் மூலம் ஏப்.4-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்.11-ஆம் தேதி காலை 8 மணிவரை விண்ணப்பிக்கலாம். ஏப்.12-ஆம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பக்கட்டணங்களை வங்கி மூலம் செலுத்தலாம்.ஏப்.18-ஆம் தேதி காலை 10 முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலம. ஏப்.24-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை 200 மதிப்பெண்களுக்கு நுழைவுத்தேர்வு நடக்கவிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.kea.kar.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...