தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் வரும் கல்வியாண்டில்,
கட்டாய கல்விச் சட்டத்தின்படி, இலவச மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது' என,
தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
மத்திய அரசு, 2009ல், கட்டாய மற்றும்
இலவச கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இதே சட்டத்தை, மாநில
அரசுகளும் கொண்டு வந்தன. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆறு வயது முதல்,
14 வயது வரையிலான குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க
வைக்கும் கட்டண செலவை மத்திய அரசே ஏற்கிறது.
இதன்படி தமிழகத்தில், சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில், 25 சதவீத மாணவர் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், ஆறு வயது முதல், 14 வயது என்பதற்கு பதில், எல்.கே.ஜி., வகுப்புக்கு மட்டும் சேர்க்கப்படுகின்றனர். அதனால், மத்திய அரசு நிதியுதவிஅளிக்கவில்லை.கடந்த கல்வியாண்டில், சமூக ஆர்வலர், 'பாடம்' நாராயணன் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, காலியிடங்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.இதன்படி, கடந்த ஆண்டில், 5,500 நர்சரி பள்ளிகளில், 30 ஆயிரம் மாணவர்; 3,500 மெட்ரிக் பள்ளிகளில், 40 ஆயிரம்பேர், கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டதாக, தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் கணக்கு காட்டியது.இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணமாக, 150 கோடி ரூபாய் தரக்கோரி, தனியார் பள்ளிகள் அரசிடம் விண்ணப்பித்துள்ளன.ஆனால், தமிழக பள்ளிக்கல்வித் துறை இதுகுறித்த எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. மாறாக, மத்திய அரசிடமிருந்து, 10.57 லட்சம் ரூபாய் மட்டுமே வந்துள்ளதாக, தனியார் பள்ளிகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதனால், தனியார் பள்ளிகள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. கட்டாய கல்விச் சட்ட நிதியை காரணம் காட்டி, பல பள்ளிகள் ஆசிரியர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளன.எனவே வரும் கல்வி ஆண்டில், இலவச கட்டாய கல்விச் சட்டப்படி மாணவர்களை சேர்க்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளன.
மாணவர்களை சேர்க்க முடியாது:
தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க பொதுச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:மத்திய அரசின் சட்டப்படி, ஆறு முதல், 14 வயது வரையிலானமாணவர்களுக்கு தான், இலவசகட்டாய கல்வி சட்டப்படி அவர்களது கல்வி கட்டணத்தை மத்திய அரசு தருகிறது.ஆனால், தமிழக அரசு இந்த சட்டத்தில், நுழைவு வகுப்பு என்ற எல்.கே.ஜி.,க்கு மாணவர்களை சேர்ப்பதால், அந்த மாணவர்களின் நிதியை மத்திய அரசு தரவில்லை. ஆனால், மாநில அரசும் அதற்கான முழுமையான நிதியை ஏற்க மறுக்கிறது.இதனால் ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கையின் போது இந்த பிரச்னை ஏற்படுகிறது. கடந்த கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அதை ஏப்ரலுக்குள் தராவிட்டால், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களைசேர்க்க முடியாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...