வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லத்தூர் மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் முயற்சியாக,
ரயில் மூலம் குடிநீர் அனுப்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
ரயில் மூலம் குடிநீர் அனுப்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் கேஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், லத்தூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து மத்திய அரசு ரயில் மூலம் குடிநீரை அனுப்பியுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை.
அடுத்த 2 மாதங்களுக்கு நாள் ஒன்றிற்கு 10 லட்சம் லிட்டர் குடிநீரை லத்தூர் நகருக்கு அனுப்ப தில்லி தயாராக உள்ளது. குடிநீரை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதியை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தில்லியிலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. ஆனால் லத்தூர் நகரின் மோசமான நிலையை கருத்தில் கொள்ளும்பொழுது, அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டியது நமது பொறுப்பு.
மேலும், இந்தியாவில் 21-ஆம் நூற்றாண்டில் தண்ணீர் தட்டுப்பாட்டால் யாராவது உயிரிழக்க நேரிட்டால் அது தேசத்துக்கே அவமானம். எனவே லத்தூர் மக்களுக்கு உதவுவது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். லத்தூர் மக்களுக்கு உதவ தில்லி அரசும் தயாராக இருக்கிறது.
தேவைப்பட்டால் நீங்கள் மற்ற பிற மாநில முதல்வர்களுக்கும் லத்தூருக்கு உதவுமாறு கோரிக்கை வைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...