கண்ணாடியை திண்ணும் வித்தை எப்படி ? மந்திரமா, தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சியில் ருசிகரம் காதில் குளிர்பானம் குடிப்பது எப்படி ? அறிவியல் உண்மை விளக்கம்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி
பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி வாயிலாக பள்ளி
மாணவர்களுக்கு அறிவியல் மேஜிக் ஷோவும், அதன் தந்திரங்களும் சொல்லப்பட்டது. நிகழ்ச்சிக்கு
வந்திருந்தோரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
வரவேற்றார்.தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை
தாங்கினார் .ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரமோகன்,
பட இயக்குனர் கரு.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் முனைவர் சேதுராமன் மாணவர்களுக்கு பந்தினை
மறையவைத்து மீண்டும் வரவைத்தல், காதில் குளிர்பானம் குடித்தல்,
திருநீறு வருவித்துக் காட்டுதல்,உடம்பின் மீது தீயை இழுத்தல் அதனால்
தீக்காயம் ஏற்படுவதில்லைவாயில் எறியும் கற்புரம் போடுதல்தண்ணிரில் விளக்கு
ஏற்றுதல், கண்ணாடி துண்டுகளை தின்னுதல்,
நீரை வானத்துக்கு அனுப்புதல்,
வெற்றுப் பையில் இருந்து பொருட்களை
எடுத்தல்,தேங்காயை உடைத்தால் பூக்கள் வெளிப்படுதல்,காதுகள் வழியாக
கேள்விகளை அனுமானித்தல்,உடல்மேல் சாம்பல் பூசியதும் பெயர் தொன்றுதல்,மாய
எழுத்துக்கள்,கைப்பாவையே கடவுள்,மூவர்ண ரிப்பன்களை இணைத்தல் மந்திரத் தீ, குறிசொல்லுதல்,
துண்டுகளை இணைத்தல் ( பிதாகரஸ் தத்துவம் ) , காசு உள்ள முட்டையை எடுத்தல்
,கைக்குட்டையை காண்பித்து மறைய வைத்து கூடு விட்டு கூடு மாற வைத்தல் ,பந்தை
இருப்பதை போலவே காண்பித்து இல்லமால் செய்து மீண்டும் பந்தை வரவைத்தல்
,ஜாதக முறையில் பெயரில் உள்ள பிரச்சினையை தீர்மானித்தல் உட்பட பல அறிவியல்
அற்புதங்களை தந்திரங்களோடு சொல்லி கொடுத்தார்.மாணவர்கள்
யோகேஸ்வரன்,ரஞ்சித்,மாணவிகள் சௌமியா ,ராஜேஸ்வரி,தனலெட்சுமி ஆகியோர்
கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.பெற்றோர்கள் கற்பகம்,அய்யதேவன்,அங்காள
ஈஸ்வரி உட்பட பலர் பேசினார்கள்.80க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்,கல்லல் அரசு
உயர்நிலைப் பள்ளி ஆசிரியை,அமராவதி புதூர் குருகுலம் மேல்நிலை பள்ளி
அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி பற்றி
பேசினார்கள்.பள்ளி ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...