எல் நினோ' வெப்ப சலனத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 'லா நினா' எனும்
குளிர் சலனம் துவங்கும் எனவும், இது 'எல் நினோ'வை காட்டிலும் மிகப்பெரிய
பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு துவங்கிய 'எல் நினோ' காரணமாக இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை நிலவுகிறது. பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுகிறது.வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது. இந்நிலையில் 'எல் நினோ' தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும்,அதனைத் தொடர்ந்து வரும் 'லா நினா' காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள்எச்சரித்துள்ளனர். இந்த குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன ர்.
இதுகுறித்து ஐ.நா., துணைப் பொதுச் செயலர் ஸ்டீபன் ஓபிரையன் கூறியதாவது: 'எல் நினா'வை தொடர்ந்து இந்த ஆண்டுஇறுதியில் வரவிருக்கும் 'லா நினா' மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது 'எல் நினா'வால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட மிகக் கடுமையாக இருக்கும். இதனால் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...