‘நபார்டு’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!
பணி பிரிவுகள்:
ஊரக அபிவிருத்தி வங்கி சேவை (ஆர்.டி.பி.எஸ்.,), ராஜ்பாஷா மற்றும் புரோடோகால் அன்ட் செக்கியூரிட்டி.
பணிகள்:மேலாளர் (ஆர்.டி.பி.எஸ்., பிரிவு மட்டும்) மற்றும்உதவி மேலாளர் (அனைத்து பிரிவுகளுக்கும்)
மொத்த காலியிடங்கள்:129
மேலாளர் (ஆர்.டி.பி.எஸ்.,):முதுநிலை பட்டப்படிப்பில் விவசாயம், கால்நடை அறிவியல், விலங்கு பராமரிப்புத் துறை, பால் தொழில்நுட்பம், தோட்டக்கலை, கலை, வணிகம், அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், ஏ.சி.எஸ்., எம்.பி.ஏ., போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம்.
வயது வரம்பு:25-35 வயது.
தேர்வு முறை:‘அப்ஜெக்டிவ்’ முறையில் 200 மதிப்பெண்களுக்கும், ‘டிஸ்கிரிப்டிவ்’ அடிப்படையில் 200 மதிப்பெண்களுக்கும் மற்றும் ’அனலட்டிகல் திங்கிங்’ அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடைபெறும். மேலும், 40 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.
உதவி மேலாளர் (ஆர்.டி.பி.எஸ்.,):இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் விவசாயம், கால்நடை அறிவியல், விலங்கு பராமரிப்புத் துறை, பால் தொழில்நுட்பம், தோட்டக்கலை, கலை,மேலாண்மை, வணிகம், அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஏ.சி.எஸ்., எம்.பி.ஏ., உள்ளிட்ட ஏதேனும் ஒருபாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:31.01.2016ம் தேதி நிலவரப்படி 21 முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை:’அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் 200 மதிப்பெண்களுக்கும், ’டிஸ்கிரிப்டிவ்’ அடிப்படையில் 200 மதிப்பெண்களுக்கும் மற்றும் நேர்முகத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.
உதவி மேலாளர் (ராஜ்பாஷா):முதுநிலை பட்டப் படிப்பில், சமஸ்கிருதம், பொருளியல், வணிகவியல், இந்தி மற்றும் இந்தி மொழிபெயர்ப்பு போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:21-33 வயது. ஓ.பி.சி., பிரிவினருக்கு, 3 ஆண்டுகளும், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு, 5 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை:‘டிஸ்கிரிப்டிவ்’ அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு பொது ஆங்கிலம், 100 மதிப்பெண்களுக்கு இந்தி மொழி தேர்வு மற்றும் 25 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு.
உதவி மேலாளர் (புரோடோகால் அன்ட் செக்கியூரிட்டி):ராணுவம், கடற்படை, விமான படையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
வயது வரம்பு:பிப்ரவரி 1, 1976 ல் இருந்து ஜனவரி 1, 1991க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை:நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:ஏப்ரல் 13
மேலும் விவரங்களுக்கு:www.nabard.org
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...