அரசுப்
பொதுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளை நீக்கும் வகையில், அதற்கான தொடர்
ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்களிடையே
எழுந்துள்ளது.
வினாத்தாள் குழப்பம்: பிளஸ்
2 அரசுப் பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி கடந்த 1-ஆம் தேதியும்,
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 11-ஆம்
தேதியும் நிறைவு பெற்றன. பிளஸ் 2 தேர்வின்போது, இயற்பியல், வேதியியல்
தேர்வுகளில் வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக, கூடுதல் மதிப்பெண் வழங்க
வேண்டும் என மாணவர்களிடையே கோரிக்கை எழுந்தது. இதையடுத்து வேதியியலில் ஆறு
மதிப்பெண், கணிதத்தில் தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும் ஆறு மதிப்பெண்,
இயற்பியலில் தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும் இரண்டு மதிப்பெண், போனஸ்
மதிப்பெண்களாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல
பத்தாம் வகுப்புத் தேர்வில், கணிதப் பாடத்துக்கான வினாவில், எழுத்துப்
பிழை காரணமாக, அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை
எழுந்துள்ளது. எனினும் இவ்வாறு தொடர்ச்சியாக வினாத்தாள் தயாரிப்பின்போது
குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தொடர் ஆய்வு மையம் ஒன்றை
அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
பொதுவாகப்
பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேர்ச்சி அடிப்படையில், பயிற்றுவிக்கும் முறை
மாற்றப்பட வேண்டும். ஆனால் அரசே, இந்தப் போக்கை ஊக்குவிக்கும் வகையில்,
மாணவர்களின் தேர்ச்சிக்காகக் குறைந்தபட்ச கையேட்டை வழங்குகிறது. இவ்வாறு
வழங்குவதால், அந்தக் கேள்விதான் வரும் என்ற மாயை ஏற்படுகிறது. அதை மட்டும்
படித்து, தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், மேற்கோள், அறிமுகப் பகுதிகளில்
கேள்விகள் வந்தால் பதிலளிக்கத் திணறுகிறார்கள்.
பிளஸ்
2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிந்ததும், அதிலுள்ள நிறை, குறைகள்
என்னென்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2, பத்தாம்
வகுப்புப் பொதுத் தேர்வுகளின் போது, இதுபோன்று பிரச்னைகள் எழுவது வழக்கமாகி
வருகிறது.
எனவே,
இந்தக் கல்வியாண்டு முதல் இணை இயக்குநர் தலைமையில், ஆசிரியர் சங்கங்கள்,
மாணவர்கள், பெற்றோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறும் அரசுப் பொதுத்
தேர்வுக்கான தொடர் ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும். இந்தப்
பிரதிநிதிகளிடம் இருந்து வினாத்தாள் மற்றும் தேர்வில் உள்ள குழப்பங்கள்
குறித்துக் கருத்துக்கள் கோரப்பட வேண்டும். இந்த ஆய்வு மையம்
தொடர்ச்சியாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் டி.எஸ். விநாயகம் கூறியதாவது:
பிளஸ்
1 பாடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் நடத்தப்படுவதில்லை. அதனால், அந்தப்
பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கும்போது பிளஸ் 2 மாணவர்கள் பதிலளிக்க
முடியாமல் திணறுகின்றனர். 100 சதவீதம் தேர்ச்சிக்காக இரண்டாண்டு பாடம்
நடத்துவது மாற வேண்டும்.
இதுபோன்று
சமூக அரசியலில் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாமல் காக்கும் வகையில்,
நிபுணர்களின் ஆலோசனைகளின்படி வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...