இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணத்தை எடுக்க முடியும்.மகாராஷ்டிராவை சேர்ந்த டி.சி.பி. வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய வசதியின் மூலம் பணம் எடுக்க ஆதார் அட்டையில் உள்ள 12 எண்களை ஏ.டி.எம். இயந்திரத்தில் டைப் செய்தால் போதும். பிறகு,நமது கைரேகையை அதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேனரில் பதிவு செய்தால் பணப் பரிமாற்றம் செய்ய நமக்கு அனுமதிஅளிக்கும்.
தனித்தனியாக பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க தேவையில்லை என்பதால் பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது சவுகரியமான வசதியாகும்.
நாடு முழுவதும் 400 ஏ.டி.எம் இயந்திரங்களை கொண்டிருக்கும் டி.சி.பி வங்கி ஓராண்டுக்குள் அனைத்து ஏ.டி.எம் இயந்திரங்களிலும் இந்த வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் ஆதார் அட்டைக்கு பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...