ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பை புறக்கணித்த கல்லுாரி
ஆசிரியர்கள்,அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பின் நேற்று பயிற்சியில்
பங்கேற்றனர்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லுõரியில் நேற்று முன்தினம்
ஓட்டுச்சாவடிகளில் எப்படி செயல்படுவது என்பது குறித்த பள்ளி,கல்லுாரி
ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
இப்பயிற்சிக்கு வந்திருந்த மன்னர் துரை சிங்கம் கல்லுõரி ஆசிரியர்கள்66பேர்,தங்களை மண்டல தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்;ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிப்பதை ஏற்க முடியாது,என்று கூறி வகுப்புகளை புறக்கணித்தனர்.சம்பள விகித அடிப்படையில் தேர்தல் பணி வழங்கப்படுவதாக கூறி,அவர்களை தாசில்தார் நாகநாதன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க கேட்டுக்கொண்டனர்.இது எங்கள் சங்கத்தின் மாநிலம் தழுவிய முடிவுஎன்று கூறி,கல்லுõரி ஆசிரியர்கள் வெளியேறி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து,அவர்களது பெயர் விபரங்களை கல்லுõரி முதல்வரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.
அப்போது கல்லுாரி முதல்வர் கேட்டுக்கொண்டதால்,பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தவிர்த்து,அவர்களுக்கு மட்டும் நேற்று தாலுகா அலுவலகத்தில் தனி பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதை ஏற்று நேற்று தாலுகா அலுவலகம் வந்த ஆசிரியர்கள், &'கல்லுாரி முதல்வர் கேட்டுக்கொண்டதால் தாசில்தாரை சந்தித்து பேசுவதற்கு மட்டுமே வந்துள்ளோம்;பயிற்சிக்குவரவில்லை,&'என்று கூறி மீண்டும் முரண்டு பிடித்தனர்.கல்லுாரி முதல்வர் அனுப்பிய வாட்ஸ் ஆப்&'தகவலை காண்பித்து,பயிற்சிக்கு மட்டுமே ஒத்துழைக்க முடியும்,பேச முடியாது,என தாசில்தார் திட்டவட்டமாக கூறினார்.அதன் பிறகு ஒரு வழியாக பயிற்சிக்கு ஆசிரியர்கள் சம்மதித்தனர். அவர்களில்61பேர் மதியம் வரை பயிற்சி பெற்றனர்.5பேர் வரவில்லை. அவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு பரிந்துரைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...