'நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக்
கல்லுாரிகளில், இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான
மாணவர் சேர்க்கையை, தேசிய நுழைவுத் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும்' என,
சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான
கால அட்டவணையையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவிலான பொதுநுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, இந்திய மருத்துவக் கவுன்சில், 2010ல், அறிவிப்பை வெளியிட்டது.'இது சிறுபான்மையினருக்காக நடத்தப்படும் கல்லுாரிகளுக்கு எதிரானது' என, தமிழகத்தின் வேலுாரில் உள்ள சி.எம்.சி., எனப்படும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து, பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, 2013ல், சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை சீராய்வு மனுவை தாக்கல் செய்தன. அதை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச், 'பொதுநுழைவுத் தேர்வு நடத்தலாம்' என, இம்மாதம், 11ல், தீர்ப்புஅளித்தது.'இந்தத் தீர்ப்பின்படி, இந்த ஆண்டே, மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என, ஒரு அரசு சாரா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.இது, நீதிபதிகள், அனில் தவே, சிவ கீர்த்தி சிங், ஏ.கே.கோயல்ஆகியோர் அடங்கியசுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, பொது நுழைவுத் தேர்வு நடத்த கால அட்டவணையை தாக்கல் செய்யும்படி, உத்தரவிடப்பட்டது.அதன்படி, பொது நுழைவுத் தேர்வை நடத்த உள்ள, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்தியக் கல்வி வாரியம், கால அட்டவணையை நேற்று தாக்கல் செய்தது.இது தொடர்பாக, மத்திய அரசு சார்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதாவது:ஏற்கனவே, ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும் அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை, மே, 1ல் நடத்த திட்டமிட்டிருந்தோம். அதையே, என்.இ.இ.டி., எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கான முதல்கட்டமாக எடுத்துக் கொள்ளலாம். ஜூலை, 24ல், இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதை ஏற்ற, சுப்ரீம் கோர்ட் அமர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணையை உறுதி செய்வதாக தன் தீர்ப்பில் தெரிவித்தது.
அட்டவனை
நுழைவுத் தேர்வு: மே, 1 மற்றும் ஜூலை, 24
தேர்வு முடிவுகள்: ஆகஸ்ட், 17
மாணவர் சேர்க்கை நிறைவு:செப்டம்பர், 30
தமிழகம் எதிர்ப்பு
இந்த வழக்கு விசாரணையின்போது, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நாகேஸ்வர ராவ், தன் வாதத்தில் கூறியதாவது:தமிழகத்தில், 2007ம் ஆண்டு முதல், நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. தற்போது நுழைவு தேர்வுக்கு தயாராக, மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் இல்லை. அதனால், நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
இந்த வாதத்தை, நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.என்.இ.இ.டி., எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக, இதற்கு முன், எந்த கோர்ட் அளித்த தீர்ப்பும், இந்தத் தீர்ப்பை கட்டுப்படுத்தாது. 2013ல் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை, இம்மாதம், 11ல், அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பு ரத்து செய்து விட்டது. அதன்படி, பொது நுழைவுத் தேர்வு நடத்த, 2010ல் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு, நடைமுறைக்கு வந்துவிட்டது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...