தேர்தல் பணிகளில் ஈடுபடும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களில் போதிய காலங்கள் ஒதுக்கப்படாமல் கொடுக்கப்பட்டுள்ளதால்,விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதில் குழப்பம் எழுந்துள்ளது
.தேர்தல் பணியில் ஈடுபடுவர்கள் அதற்கான, சுய விபர விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயம்.
கோவை மாவட்டத்தில், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறும் பணிகள் நடந்துவருகின்றன.மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மாநில அரசின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும், பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரத்து 549 பேருக்கு கட்டாய தேர்தல் பணி வழங்கப்படவுள்ளது. அதற்கான, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தர மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், மத்திய அரசு ஊழியரா, மாநில அரசு ஊழியரா, தர ஊதியம், அடிப்படை ஊதியத்தின் கூட்டுத்தொகை கேட்கப்பட்டுள்ளது.இதில், தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் பகுதி நேர ஆசிரயர்கள் விபரங்களை பதிவு செய்ய போதிய காலங்கள் ஒதுக்கப்படவில்லை.மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் முதன்முறை இப்பணியில் ஈடுபடவுள்ளதால், தபால் ஓட்டு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இவர்களுக்கான தனிப்பயிற்சிகள் குறித்து இதுவரை, தேர்தல் ஆணையம், மாவட்டநிர்வாகம் அறிவிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''பகுதி நேர ஆசிரியர்கள் கட்டாயத்தின்படி, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிலர் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், நிரந்தர ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் உரியது. பகுதி நேர ஆசிரியர்கள் விபரங்களுக்கு காலங்கள் இல்லை.இதனால், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதில் குழப்பம் எழுந்துள்ளது. எனவே, புதிய விண்ணப்ப படிவங்களை அச்சிட்டு வழங்கவேண்டும், மேலும், தபால் ஓட்டு குறித்த பயிற்சியை முறைப்படி வழங்க வேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...