இந்தியாவில் வழக்கமான கோடைக் காலத்தை விட, இந்த ஆண்டு ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக வெயில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இந்தியாவின் வடக்குப் பகுதியில் தில்லியில் இருந்து தெற்கே தெலங்கானா வரையுள்ள மாநிலங்கள் அனல் காற்று மண்டலங்களாகக் வரையறக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அதிகபட்ச வெயில் அளவு பதிவாக கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் இந்த மண்டலத்தில் கடுமையான அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பம் அதிகரிப்புக்கும் பசிபிக் பெருங்கடல் மீது உருவாகியுள்ள எல்-நினோவுக்கும் தொடர்பிருப்பதாகவும், வரும் நாட்களில் எல் நினோ பலவீனம் அடையும் என்றும் கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...