சட்டசபை தேர்தலால், பள்ளி செல்லா குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும்
நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி
இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில்,
ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, பெயர்
விவரங்களுடன் ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்துவர்.
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களை கொண்ட குழு, இந்த பணிகளில் ஈடுபடும்.
இதற்கான உத்தரவு, மார்ச் இறுதியில் வட்டார வள மையங்களுக்கு பிறப்பிக்கப்படும். இதையடுத்து, இரண்டு மாதங்கள் வீடு வீடாகச் சென்று, ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்துவர். இந்த கணக்கெடுப்பு முடிவு வந்தவுடன், அவை தொகுக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்படும். பின், மத்திய அரசிலிருந்து நிதிகள் ஒதுக்கப்படும்.இதையடுத்து, ஜூனில் பள்ளிகள் திறந்ததும், கணக்கெடுத்த ஆசிரியர்கள் மூலம், பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து பேசி, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்னும் துவங்கவில்லை; அதற்கான அறிவிப்பும் வெளியிடவில்லை.எனவே, வரும் கல்வி ஆண்டில், பள்ளிக்கு வராத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து, எழுத்தறிவு ஆய்வில், மற்ற மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...