Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார் பள்ளிகளுக்கு மேலாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினிக் கல்வி.

       அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மற்றும் 21000க்கும்மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரக் கோரிக்கை:


1). அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினிஅறிவியல் பாடத்தை நிகழ் ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும் (தனியார்பள்ளிகளுக்கு மேலாக).

2.)சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல்  பாடத்தை,மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.அதற்காக அச்சிட்ட(6ம் வகுப்பு முதல் 10ம் வரை)பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

3.) புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறியவியல்பாடப்பிரிவு இல்லை.அங்கு கணினி அறியவியல் பாடப்பிரிவைகொண்டுவந்து அதற்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

4)அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை  மாணவர்கள் எண்ணிக்கைக்குஏற்பஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

5).பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க, நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளுக்குகுறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்

6).மத்திய அரசின் திட்டத்தின் கீழ்:புதிய கல்விக்கொள்கை ,டிஜிட்டல்இந்தியா,SSA,RMSA திட்டத்தில் ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாகஅறிவிக்கவேண்டும்."கணினிக்  கல்வியை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் வாழும் கோடிக்காணக்கானகிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறுவர்கள்..அரசு பள்ளியின் தரம் மற்றும் மாணவர்களின் கல்வித் தரம் வாழ்க்கை உயர அரசுஅனைத்து பள்ளிகளிலும் கணினி கல்வியை கட்டாயக்கல்வியாக கொண்டு வரவேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அனைத்துக் கட்சியின்தலைவர்கள் நமது கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும்.இதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கங்களும் ஆதரவு தர வேண்டும்.

வெ.குமரேசன்
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.




1 Comments:

  1. Kandipaga intha varudam nadaimurai padutha vendum computer science teachers

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive