புவனேஸ்வர் ரயில் நிலையதில், இலவச 'வை - பை' வசதி, நாளை தொடங்கப்படுகிறது.
'டிஜிட்டல்' இந்தியா திட்டத்தின் கீழ், முக்கியமான ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்தப் பணி, ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான, 'ரயில்டெல்'லிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ரயில் நிலையங்களில், இலவசமாக, 'வை - பை' வசதி வழங்கும் பணியை, 'ரயில்டெல்' செய்து வருகிறது. மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தான், முதன்முறையாக, பயணிகளுக்கு இலவசமாக 'வை - பை' வசதி வழங்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது ரயில் நிலையமாக, ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், இலவச 'வை - பை' வசதி, நாளை தொடங்கப்படுகிறது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும், இந்த வசதியை பயன்
படுத்தி கொள்ள முடியும். இதுபற்றி ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாடு முழுவதும், 400க்கும் அதிகமான ரயில் நிலையங்களில், 'வை - பை' வசதி செய்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், பாட்னா, ராஞ்சி, எர்ணாகுளம், அலஹாபாத், லக்னோ உட்பட, 10க்கும் அதிகமான ரயில் நிலையங்களில், 'வை - பை' வசதி வழங்குவதற்கான சோதனை நடந்து வருகிறது.
விரைவில், இந்த ரயில் நிலையங்களில், 'வை-பை' வசதி முழுமையாக தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள், 100 ரயில் நிலையங்களில், 'வை - பை' வசதி செய்து தரவும்,
ரயிலவே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அதிகாரி கூறினார்.
விரைவில், இந்த ரயில் நிலையங்களில், 'வை-பை' வசதி முழுமையாக தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள், 100 ரயில் நிலையங்களில், 'வை - பை' வசதி செய்து தரவும்,
ரயிலவே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அதிகாரி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...