மத்திய பல்கலைக்கழகங்களில் 5,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன;
ஸ்மிருதி ராணி தகவல் புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுக்கு
சொந்தமான பல்கலைக்கழகங்களில் 5,928 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை மந்திரி ஸ்மிருதி
ராணி தெரிவிக்கையில், மொத்தம் 16,600 ஆசிரியர் பணிகள் மத்திய
பல்கலைக்கழங்களில் இருப்பதாகவும் ஆனால் அதில் 10,672 பணிகள் மட்டுமே இதுவரை
நிரப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5,928 பணிகள் காலியாக இருப்பதாகவும்
தெரிவித்தார். குறிப்பாக, எஸ்.டி பிரிவில் 112 பேராசிரியர் பணியிடங்கள்
காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மொத்தம் உள்ள 34,272
ஆசிரியர் அல்லாத பணிகளில் 10,015 பணிகள் இன்னும் நிரப்படாமலேயே
இருப்பதாகவும் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...