மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகையுடன் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 50 பேர் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர்க்கப்பட உள்ளனர்.
எபிலிட்டி பவுண்டேசனும், சத்தியபாமா பல்கலைக்கழகமும் இணைந்து மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இந்தச் சலுகையை அளிக்க முன்வந்துள்ளன.
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் உள்ள பி.இ., பி.டெக்., பி.காம்., பி.எஸ்சி., (காட்சி தொடர்பியல்), எம்.பி.ஏ., ஆகிய படிப்புகளில் 50 மாற்றுத் திறனாளிகள் சேர்க்கப்பட இருக்கின்றனர்.
கல்வி உதவித் தொகையுடன் இந்தப் பட்டப் படிப்புகளில் அவர்கள் சேர்க்கப்படுவர். அதாவது, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் இதில் அடங்கும். இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் படிவங்களை எபிலிட்டி பவுண்டேசனுக்கு மே 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.abilityfoundation.org என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...