Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நிலக்கரி நிறுவனத்தில் 400 கிரேடு 'பி', 'சி' பணி

                              அரசு நிறுவனங்களில் ஒன்றான Western  Coalfields Limited (WCL)  எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள கிரேடு 'பி' மற்றும் 'சி'  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Mining Sirdar,Shot Firer, T&S Grade-C  காலியிடங்கள்: 388
தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் டிப்ளமோ முடித்து, கியாஸ் டெஸ்ட்டிங், ஃபர்ஸ்ட் எய்டு போன்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19035 + இதர படிகள்

பணி: Surveyor (Min)  T&S Grade-B
காலியிடங்கள்: 12
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் சர்வேயர் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது இன் மைனிங் மற்றும் மைனிங் சர்வேயிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20552 + இதர படிகள்
வயதுவரம்பு: 01.03.2016 தேதியின்படி பொது பிரிவினர் 18 - 30க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 33-க்குள்ளும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://westerncoal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை நகல்கள் இணைத்து, பாஸ்போட் அளவு புகைப்படம் ஒட்டி ‘General  Manager(P/IR), Western Coalfields Limited, Coal  Estate, Civil Lines, Nagpur -440001’ என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ‘Western Coalfields Limited,  Nagpur’ என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேரக் கடைசி தேதி: 16.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://westerncoal.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive