
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. இதில்1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் . 3 லட்சம்பேர் உடல்உறுப்புகளை இழந்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுவதால் பெரும்பான விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, இதனை கட்டுப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி புதிய யோசனையை முன்வைத்துள்ளார்.வெளிநாடுகளில் இருப்பதை போன்று சாலைகளில் முப்பரிமாண வேகத்தடுப்பு வரைபடங்களை தத்ரூபமாக வரைவதன் மூலம், வாகன ஓட்டிகள் வேகத்தை குறைக்கச் செய்வதே அவரது யோசனை. இதனை செயல்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.14 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா, கனடா போன்றநாடுகளில் இவை வந்துவிட்டது என்றாலும் தற்போது இந்தியாவில் இதை கொண்டுவர மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.
பெரிய நெடுஞ்சாலைகள், வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சாலைகளில் இதுபோன்ற முப்பரிமாண ஸ்பீடு பிரேக்கர்களை வரைந்து விட்டால் தேவையில்லாமல் வேகத்தடுப்புகளை அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது. வேகமாக செல்லும் வாகனங்கள் தூரத்தில் இருந்தே இந்த வரைபடத்தை பார்க்க முடிவதால் ஸ்பீடு பிரேக்கர்களால் ஏற்படும் விபத்துகளும் குறைய வாய்ப்பு உள்ளது.இந்த திட்டம் குறித்து கட்காரி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவரை பின்தொடரும் பலர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.ஒருமுறை இந்த முப்பரிமாண வரைபடத்தை அறிந்துகொண்ட டிரைவர், அதன்பின்னர் தனது வேகத்தை குறைப்பார் என்று நினைக்க முடியுமா? என்று ஒருவர் டுவிட் செய்துள்ளார். இது மோசமான யோசனை என்றும், இதைப் பார்த்து தடுப்பு உள்ளதாக நினைத்து டிரைவர் பிரேக் போடலாம் என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஒளிரும் பெயிண்டுகளைப் பயன்படுத்தி தரமானதாக இந்த 3டி வேகத்தடையை உருவாக்க வேண்டும் என்று மற்றொருவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...