கடலூர்:தேர்தலில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் 3 கட்ட பயிற்சியில் முதல்
பயிற்சியான ஏப்.24-ம் தேதி துவங்குகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கான
வாக்குப்பதிவு மே16-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் பணிகளில்
மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக தேர்தல்
பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பானது ஏப்.24-ம் தேதி நடைபெறுகிறது. மேலும், மே 7, 12-ம் தேதிகளிலும் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
முதற்கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான ஆணை இணையதளம் மூலமாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளில் மொத்தம் 11,851 அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சி ஆணைகள் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வழங்கப்படவுள்ளது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மோ.ஷர்மிளா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நா.உமாமகேஸ்வரி (கடலூர்), பி.எஸ்.விஜயலட்சுமி (சிதம்பரம்), பி.எம்.செந்தில்குமார்(விருதாச்சலம்) ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...