Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

        திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் நடைபெற்று வந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. மார்ச் 14-ஆம் தேதி முதலே தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வந்தது.
1,200 ஆசிரிய-ஆசிரியைகள்: 2 மையங்களிலும் சேர்த்து முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், ஆசிரிய-ஆசிரியைகள் என சுமார் ஆயிரத்து 200 பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணி நிறைவடைந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் கணினியில் பதியப்பட்டன. மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்த விடைத்தாள் திருத்தும் பணி தற்போது முடிவடைந்துவிட்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive