பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் இன்றுடன் முடிவடைகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ல் முடிவடைந்தது.
8 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 64 மையங்கள் அமைக்கப்பட்டன.இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை ‘பார்கோடு’ மூலமாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறும். அதன்பிறகு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் மதிப்பெண்களை தொகுக்கும் பணியும், சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என்று அரசு தேர்வுத்துறையினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...