பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண்
கேள்விகள் 'புளூபிரின்ட்' படி கேட்கப்படாததால், நுாறு மதிப்பெண் எடுப்பது
கடினம்,' என, மாணவர்கள் தெரிவித்தனர்.
வினாத்தாள் தொடர்பாக விருதுநகர்
மாவட்ட மாணவர்கள் கூறியதாவது: ஆர்.ரத்தினமணி, ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்
பள்ளி,விருதுநகர்: வினாக்கள் எளிதாக இருந்தன. 5, 10 மற்றும் 3 மதிப்பெண்
வினாக்கள் நேரடி வினாக்களாக இருந்ததால் வேகமாக பதில் எழுத முடிந்தது.
புத்தகம், வெளியில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.
ஒரு மதிப்பெண்
வினாக்களுக்கு மட்டும் யோசித்து பதிலளிக்க வேண்டியிருந்தது. தேர்ச்சி
எளிது.எம்.ஸ்டெல்லா, ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி, சிவகாசி: ஒரு மதிப்பெண்
வினாக்கள் கடினமாகவும், 5 மதிப்பெண் வினாக்கள்
எளிதாகவும் இருந்தன. பாடங்களை வரிவிடாமல்
படித்திருந்ததால் 10 மதிப்பெண் வினாவிற்கு எளிதாக பதில் எழுத முடிந்தது.
வினாக்கள் நுணுக்கமாக இருந்தன.
ஒருமதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததால் 'சென்டம்' எடுப்பது கஷ்டம்.
அஜித்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
காரியாபட்டி: அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களாகவே இருந்தன. இந்த
வினாக்களுக்கு ஆசிரியர்கள் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வைத்ததால்,
மனதில் நன்றாக பதிந்து இருந்தது. அனைவருமே நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள்.
கடைசி தேர்வை திருப்தியாக, முழுமையாக எழுதியதில்
மகிழ்ச்சி.டி.சங்கரலிங்கம்,ஆசிரியர், கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி,
விருதுநகர்: ஒரு மதிப்பெண் வினாக்களில் 7, 17, 20ம் வினாக்கள் தான்
சிந்தித்து எழுதும் வகையில் இருந்தன.
3, 5, 10 மதிப்பெண் வினாக்கள் எளிதாக
இருந்தன. 10 மதிப்பெண் வினாக்களில் நான்கில் மூன்று வினாக்களை அனைத்து
மாணவர்களும் எளிதில் எழுதிவிடலாம்.ஒரு மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்ட
கணக்குகள் மட்டும் 'புளூ பிரின்ட்' படி இல்லை. புளூ பிரின்ட் படி 3 ,5 ,
8வது பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட வேண்டும். ஆனால் 1வது
பாடத்தில் இருந்து ஒரு மதிப்பெண் கணக்கு வினா கேட்கப்பட்டது. ஒரு மதிப்பெண்
வினாக்களால் நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும். பிற
வினாக்கள் மிக எளிது. இவ்வாறு கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...