'இறுதி வாக்காளர் பட்டியல், 29ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழகத்தில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஜன., 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதன்பின், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த வாக்காளர்களின் பெயர், இறந்தவர்களின் பெயர், என, ஆறு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
சட்டசபை தேர்தலையொட்டி, சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, 6.55 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.இவ்விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி, 22ம் தேதிக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில மாவட்டங்களில், இன்னமும் பணி நிறைவு பெறவில்லை.எனவே, 29ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...