Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

20GB அளவான 3G இன்டர்நெட் டேட்டா வெறும் 50 ரூபாய்க்கு - டிஜிட்டல் இந்தியா

இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக இன்டர்நெட் டேட்டா அளவு மற்றும் அதன் வேகம் ஆகிய இரண்டையும் கூறலாம்.
இன்டர்நெட் டேட்டா அதிகளவில் கிடைத்தால் அதன் வேகம் குறைவாகவும், இன்டர்நெட் வேகம் அதிகளவில் இருந்தால் டேட்டா குறைவாகவும் என்று, இன்டர்நெட் டேட்டாகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் நம்மை பந்தாடிக்கொண்டு இருக்கின்றன.
ஆகவே இன்று கணணி மற்றும் ஸ்மார்ட் போன் மூலமாக இன்டர்நெட் பயன்படுத்த்வோர் அனைவருமே இந்த பிரச்சினையை சந்திக்க தவறியதில்லை.இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தரும் விதமாக BSNL நிறுவனம் மிகச்சிறந்ததொரு இன்டர்நெட் சலுகையை அறிமுகபடுத்தி உள்ளது. அதாவது  வெறும் 50 ரூபாய்க்கு 20 GB அளவான 3G இன்டர்நெட்.டிஜிட்டல் இந்தியாவின் மற்றுமொரு திட்டமாக அறிமுகமாகி உள்ள இந்த இன்டர்நெட்சலுகை மூலம் நீங்கள் பெரும் 20 GB டேட்டாவை இந்தயாவில் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கும் மேலதிக 4 BSNLபாவனையாலர்ளுடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
இந்த வசதியை செயற்படுத்தி கொள்ள BSNL பாவனையாளர்கள் தங்களுடைய BSNL கணக்கில் லொகின் செய்து, தங்களுக்கு பிடித்த 4 நபர்களின் தொலைபேசி இலக்கம் மற்றும் ஒரு சில தனிப்பட்ட விபரங்களை வழங்குவதன் மூலம்தங்களுடைய இன்டர்நெட் டேட்டாவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மற்றுமொரு முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய இன்டர்நெட் சலுகையின் நோக்கம், இந்திய நாட்டின் அனைத்து பாகங்களிலும் வாழும் நடுத்தர மக்களும் இன்டர்நெட்-ஐ பாரபட்சம் இன்றி பயன்படுத்த வேண்டும் என்பதேயாகும். இந்த விஷயம் தொடர்பிலான அதிகாரபூர்வமான செய்தியை பிரபல்ய தளமான இந்தியா டாட் கொம் தளம் நேற்று (ஏப்ரல் 20 ஆம் தேதி) வெளியிட்டு இருந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive