பிளஸ் 2 பொருளியல் தேர்வில் 22
மதிப்பெண்களுக்கு 'புக் பேக்கில்' இடம் பெறாத வினாக்கள் கேட்கப்பட்டு
மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில் இருந்ததால் 'சென்டம்' பெறுவது சவாலாக
இருக்கும்,' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
சென்ற ஆண்டு பொதுத் தேர்வில் அனைத்து
பாடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் 'சென்டம்' பெற்றது சர்ச்சை
ஏற்படுத்தியது. இதனால் இந்தாண்டு தேர்வில் 'புக்பேக்'கில் உள்ள நேரடி
வினாக்களுடன், பாடத்திற்குள் தேடிப்பிடித்தும், இதுவரை பொதுத் தேர்வுகளில்
கேட்கப்படாத வினாக்களாக கேட்கப்பட்டதால் மாணவர்கள் திணறினர்.
'சென்டம்' அதிகம் பெறுவதை தவிர்க்கும்
வகையில் இதுமாதிரி சிந்திக்க வைக்கும் வினாக்கள் ஒரு மதிப்பெண் பகுதியில்
ஒன்று அல்லது இரண்டு வினா தான் கேட்கப்பட்டன. ஆனால் நேற்று நடந்த பொருளியல்
தேர்வில் அதிகபட்சமாக 22 மதிப்பெண்களுக்கு இதுபோன்ற வினாக்கள்
கேட்கப்பட்டதால் சரியாக விடையளிக்க மாணவர்கள் அதிகம் திணறினர்.
மதுரை முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி
ஆசிரியர் சந்திரன் கூறியதாவது: மூன்று மதிப்பெண் பகுதியில் 53, 57, 59,
60ம் வினாக்கள் 'புளூ பிரின்ட்'படி அடிப்படையில், பொருளியல் பிரச்னை,
சமநிலை விலை, உற்பத்தி மற்றும் செலவும் வருவாயும் ஆகிய பாடங்களில் இருந்து
வினாக்கள் கேட்கப்பட்டாலும், 'புக்பேக்' வினாக்களாக அவை இல்லை. சிந்தித்து
விடையளிப்பதாக இருந்தன. 10 மதிப்பெண் பகுதி 75வது வினா 'மாநில அரசின்
வரிசார்ந்த மற்றும் வரிசாராத வருவாய் எவை' என்று தான் 'புக்பேக்'கில்
உள்ளது. ஆனால் 'மத்திய அரசின் வரிசார்ந்த மற்றும் வரிசாராத வருவாய்' என
கேட்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 மதிப்பெண்ணுக்கு பாடங்களின் உட்பகுதியில்
இருந்து சிந்தித்து எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டன, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...