வேட்பாளர்கள் தங்கள் பெயரை வருகிற 19-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
.சிறப்பு அனுமதிசட்டசபை தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்தியது. அப்படியிருந்தும் பெயர் சேர்க்காதவர்கள் 15-ந்தேதி(நேற்று) வரை பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்து விட்டது.
எனவே இனி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதியை அளித்துள்ளது. ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் தமிழகத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தலில் போட்டியிட முடியாது.19-ந்தேதி வரை சேர்த்து கொள்ளலாம்எனவே கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்று சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவை சரியாக இருக்கிறதா? பிறந்த தேதி, தந்தை பெயர் போன்ற விவரங்கள் சரியாக உள்ளனவா? என்றும் உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சேர்த்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...