Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்பிஐ வங்கியில் 17140 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

      வங்கி பணிக்காக காத்திருப்போரா நீங்கள்! உங்களுக்கான ஒரு நல்ல செய்தியினை,              நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" தனது வங்கி விரிவாக்கத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையின் தரத்தை உயர்த்தும் வண்ணமாக 17,140 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை) பிரிவுக்கு 10,726 பேரை வழக்கமான முறையிலும், ஜூனியர் விவசாய அசோசியேட்ஸ் பிரிவுக்கு 3008 பேரையும், சிறப்பு ஆட்சேர்ப்பு முறையில் 3,406 பேரை ஜூனியர் அசோசியேட் பிரிவுக்கும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" வங்கியில் பணியாற்ற சுமார் 17,140 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை) மற்றும் ஜூனியர் ஜூனியர் விவசாய அசோசியேட்ஸ் பணிக்கு, ஒருவர் ஒரு மாநிலத்தில் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.சிறப்பு ஆட்சேர்ப்பின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் ஒரு மாநிலத்தில் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். துரா (மேகாலயா) காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் ஜூனியர் அசோசியேட்ஸ் சிறப்பு அட்சேர்ப்பு பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், அந்தந்த மாநிலங்களின் அதிகாரப்பூர்வ மொழிகளில் (எழுத,படிக்க,பேச) புலமை பெற்றிருக்க வேண்டும்

விளம்பர எண். CRPD/CR/2016-17/01

பணி காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Associate (Customer Support & Sales)காலியிடங்கள்: 10,726

பணி: Junior Agricultural Associateகாலியிடங்கள்: 3396

பணி: Jr.Associate Special Recruitment Drive for filling up of Backlog Vacancies
காலியிடங்கள்: 3218

பணி: Jr.Associate Special Recruitment Drive for Tura, Maghalaya and Kashmir Valley & Ladakh
காலியிடங்கள்: 188
தகுதி: 30.06.2016 தேதியின்படி கலை, அறிவியல், மேலாண்மை, வணிகவியல் மற்றும் விவசாயத்துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு இறுதி தேர்வுக்கு தகுதியானவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத் தேர்வு, பணியில் சேரும்போது அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016

முதற்கட்ட தேர்வு வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com அல்லது www.sbi.co.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive