Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 15 வயதுள்ள பெண் குழந்தைகளும் சேரலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

செல்வமகள் சேமிப்பு கணக்கில்பிறந்தகுழந்தைமுதல் 14 வயதானசிறுமிகள்வரைஇணையலாம் என்றநிலை இருந்தது.
இனி 15 வயதுவரை இந்ததிட்டத்தின் கீழ்கணக்கு தொடங்கலாம் என்றுஅஞ்சல் துறை
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்தியபத்திரிகைதகவல்அலுவலகம்வெளியிட்டசெய்திக்குறிப்பில், ''பெண்குழந்தைகளின்வாழ்க்கைமேம்பாட்டுக்காகசெல்வமகள் சேமிப்புத்திட்டம்என்னும்திட்டம் கடந்தாண்டுஜனவரிமாதம்தொடங்கி வைக்கப்பட்டது. இந்ததிட்டத்துக்குபொதுமக்கள் மத்தியில்பெரியளவில் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில்இத்திட்டத்தின் கீழ் 12 லட்சத்து 38ஆயிரம்கணக்குகள் உள்ளன. சென்னைநகரமண்டல அஞ்சல்வட்டத்தில் 4 லட்சத்து 38ஆயிரம் கணக்குகள் உள்ளன.
இந்த திட்டத்தை நோக்கிஅதிகப்படியானகணக்குகளை ஈர்க்கும் நோக்கில் மத்தியஅரசுபல்வேறுதிருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
செல்வமகள் சேமிப்பு கணக்கில்பிறந்தகுழந்தைமுதல் 14 வயதானசிறுமிகள்வரைஇணையலாம் என்றநிலை இருந்தது.இனி 15 வயதுவரை இந்ததிட்டத்தின் கீழ்கணக்கு தொடங்கலாம். மேலும், அபராதக்கட்டணம், பணம் செலுத்தாமைபோன்றஇக்கட்டுகளால்வரும் விளைவுகளைதடுக்கஆண்டுதோறும் ரூ.1000 வசூல்செய்யவும்முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்ததொகைசேமிப்பு கணக்கில்சேர்க்கப்பட்டுஅதற்கான வட்டியும் தரப்படும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில்கணக்குவைத்துள்ளவர்கள்தங்களதுஇருப்பிடத்தைமாற்றும் போது, அந்தகணக்குமுடித்து வைக்கப்படும். கணக்கைமாற்றமாகிசெல்லும் இருப்பிடத்தில்உள்ளஅஞ்சலகத்துக்குமாற்ற விரும்பினால், உரியமுகவரிசான்றினை பெற்றுக்கொண்டுகணக்குமாற்றியளிக்கப்படும்.
5 ஆண்டுகளை நிறைவு செய்தகணக்கைகொண்டசேமிப்புதாரர், நோய்வாய்ப்படுவதல்,அசம்பாவிதங்களைசந்தித்துஅபாயகட்டத்துக்கு செல்லுதல் போன்றநிலையில் இருந்தால், அவரதுகணக்குமுடித்து வைக்கப்பட்டுஅவரதுஉறவினர்அல்லதுகாப்பாளரிடம்அளிக்கப்படும். 18 வயதுநிறைவுசெய்தவர்கள், 10-ம் வகுப்புமுடித்தவர்கள், தங்களின்மேற்படிப்புக்காகசேமிப்புத் தொகையில் பாதி அளவைபெற்றுக்கொள்ளலாம். 21 வயதிலோஅல்லதுதிருமணம் ஆனஒருமாதத்திலோபெண்கள் தங்களின்கணக்கைமுடித்துக்கொள்ளலாம். மேலும், வட்டி விகிதம்ஏப்ரல்1 முதல் 8.6 சதவீதமாக்கப்படும்'' என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive