தமிழகத்தில் பள்ளி பொது தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஓட்டம் பிடிக்கும், பள்ளி மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில், சேலத்தில் நான்கு
மாணவியர் மாயமாகி உள்ளனர்.
பெற்றோர் டார்ச்சர்:தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிந்தநிலையில், பெற்றோரின் டார்ச்சர், மதிப்பெண் குறைவு ஏற்படும் என்ற அச்சம், காதலர்களுடன் ஓட்டம் பிடிப்பது என, மாணவியர் மாயமாவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு, ஏப்., 1ம் தேதி முடிந்த நிலையில், ஏப்., 3ம் தேதி வரை, 150 பேர் மாயமாகி இருந்தனர். பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13ம் தேதி முடிவடைந்தது. அதை தொடர்ந்து மாணவியர் மாயமாவது தொடர்கிறது. மாணவியர் மாயம் குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், ஏப்.,1 துவங்கி, ஏப்., 15ம் தேதி மதியம் வரை, 200 மாணவியரும், 175 மாணவர்களும் மாயமாகி உள்ளனர். சேலம் மாநகரில் 17 மாணவியர் மாயமான நிலையில், 12 பேர் கண்டு பிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
காணவில்லை என, போலீஸ் ஸ்டேஷன்களில் பெற்றோர் அளித்த புகார்களின் படி, போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பணியில் தீவிரம்:கடந்த ஆண்டு தேர்வு முடிந்த ஒரே வாரத்தில், 150 பேர் மாயமான போது ஐந்து நாளில், 100 பேரை போலீசார் கண்டுபிடித்தனர். நடப்பாண்டு போலீசார் தேர்தல் பணியில் தீவிரம் காட்டியும் மாணவியரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...