மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)
நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்!
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப்
புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தள்ளிப் போன
காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கு
சாதகமாகும்.
செவ்வாய் 8-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது இந்த
ஆண்டு பிறப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் அதனால்
ஆதாயமும் கிடைக்கும். சகோதர ஒற்றுமை வலுப்பெறும். பழைய கடன் பிரச்னைகள்
கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆவணி மாதம் பிற்பகுதிவரை செவ்வாயுடன் சனியின்
சேர்க்கை இருப்பதால், சிறுசிறு விபத்துகள், உடல்நலக் குறைவு, வீண்பகை
போன்றவை வந்துசெல்லும். வீடு, மனை வாங்குவதில் எச்சரிக்கை யுடன்
செயல்படவும்.
வருடம் பிறக்கும்போது உங்கள் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் புதனும்
சேர்ந்திருப்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகள்
பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்கள்
செய்வீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
1.8.16 வரை குரு 5-ம் வீட்டில் இருப்பதால், மனக் குழப்பங்கள் நீங்கும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில்
நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ
பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு
உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். எவ்வளவு
பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அவ்வப்போது மரியாதைக் குறைவான
சம்பவங்கள் நிகழக் கூடும். 17.1.17 முதல் 9.3.17 வரை குரு அதிசாரத்திலும்
வக்ரகதியிலும் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால்,
மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம்
அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களிடம் மரியாதை கூடும்.
வருடம் முழுவதும் அஷ்டமத்து சனி நீடிப்பதால், அடிக்கடி மனச் சஞ்சலம்
ஏற்படும். சிறுசிறு விபத்து கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை
அனுசரித்துச் செல்லுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
குடும்ப விஷயங்களை மற்றவர் களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
26.8.16 முதல் 18.9.16 வரை சுக்ரன் 6-ல் சென்று மறைவதால், வாகன விபத்து,
வழக்கால் நெருக்கடிகள், வாழ்க்கைத் துணைக்கு உடலநலக் குறைவு ஏற்படக்கூடும்.
வருடம் முழுவதும் ராகு 5-ல் இருப்பதால் பிள்ளை களை அனுசரித்துப் போகவும்.
அவர்களின் படிப்பு மற்றும் திருமண விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
ஆனால், கேது 11-ல் இருப்ப தால், ஷேர் மூலம் பணம் வரும். கோயில்
கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வேற்று மொழியைச்
சேர்ந்தவர்களால் நன்மை உண்டாகும்.
வியாபாரத்தில், கடினமாக உழைத்து ஓரளவு லாபம் பெறுவீர் கள். பழைய
வேலையாட்களை மாற்றுவீர்கள். இப்போதைக்கு பெரிய முதலீடுகள் வேண்டாம். கட்டட
உதிரிபாகங்கள், கடல்வாழ் உயிரினம், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம்
உண்டு. ஆனி, புரட்டாசி, தை, மாசி ஆகிய மாதங்களில், நண்பர்களது உதவி யால்
வியாபாரத்தை விரிவுபடுத்த சந்தர்ப்பம் உண்டாகும்.
உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய
சலுகைகளைப் போராடியே பெறவேண்டி இருக்கும். ஒருசிலருக்கு, பணியின் காரண மாக
அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
மாணவ – மாணவிகள், பாடத்தில் கவனம் செலுத்துவது அவசியம். போட்டிகளில் வெற்றி
பெறும் வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையினரே! போட்டி களையும் தாண்டி
முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
மொத்தத்தில் இந்த துர்முகி வருடம் சூழ்ச்சிகளையும், சிக்கல் களையும் தந்து
உங்களை அச்சுறுத் தினாலும், இறுதியில் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்
திருவாதிரை திருநாளில் உத்தரகோசமங்கை தலத்துக்குச் சென்று ஸ்ரீமங்களேஸ்வரி
உடனுறை ஸ்ரீமங்களேஸ்வரரையும், மரகத நடராஜரையும் வழிபட்டு வாருங்கள்; நலம்
உண்டாகும்.
ரிஷபம் (கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)
கொள்கை மாறாதவர் நீங்கள்.
உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்த வருடம் பிறப்பதால், சின்னச் சின்ன
ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தன்னம்பிக்கை கூடும்.
பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். வெளிநாடு
வெளிமாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
9.9.16 முதல் 25.10.16 வரை செவ்வாய் 8-ல் மறைவதாலும் 19.9.16 முதல்
13.10.16 வரை உங்களின் ராசிநாதனான சுக்ரன் 6-ல் மறைவதாலும் வீண் அலைச்சல்,
தொண்டை வலி, சகோதர வகையில் சச்சரவுகள், வழக்கால் நிம்மதியின்மை,
கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும்.
வருடம் முழுவதும் ராகு 4-லும் கேது 10-லும் தொடர்வதால், தாயின் உடல் நலன்
பாதிக்கப்படும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் செய்ய நேரிடும்.
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு உரிமையாளரால் சிற்சில பிரச்னைகள்
உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாமீன் தரவேண்டாம். சின்னச் சின்ன அவமானங்கள்
வந்து போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.
1.8.16 வரை குரு பகவான் 4-ல் அமர்வதால், வேலைச் சுமை அதிகரிக்கும். வாகன
விபத்துகள் ஏற்படக்கூடும். சிலர், சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற
வேண்டியது வரும். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17
வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் அமர்வதால், வசதி, வாய்ப்புகள் பெருகும்.
வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலருக்கு
குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வ
பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும்
ராசிக்கு 6-ல் சென்று மறைவதால், வேலைச் சுமை அதிகரிக்கும். உங்களுடன்
பழகும் சிலரே உங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடும்.
வருடம் முழுவதும் சனி உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாகத்
தொடர்வதால், கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். திருமண
முயற்சிகள் தாமதமாக முடியும். வாழ்க்கைத் துணையின் ஆரோக் கியம்
பாதிக்கப்படும். முக்கியமான பணிகளை நீங்களே நேரடியாகச் செய்து முடிப்பது
நல்லது. பாஸ்போர்ட், வாகனத்துக்கான லைசென்ஸ், ஆர்.சி புத்தகங்களை உரிய
நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளவும்.
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும்.
மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து செயல்படவும்.
விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப் பாலும் பழைய சரக்குகளை விற்றுத்
தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். புதிய
நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்வது மற்றும் கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு
முன்பாக வழக்கறிஞரிடம் ஆலோசிப்பது நல்லது. ஆவணி, ஐப்பசி, மாசி மாதங்களில்
பற்று வரவு உயரும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால்
ஆதாயம் உண்டு.
வருடம் முழுவதும் கேது 10-ல் தொடர்வதால், உத்தியோகத்தில் கூடுதல் நேரம்
வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரி, உங்களைப் புரிந்துகொள்ளமாட்டார்.
உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சக ஊழியர்களில்,
சிலர் உங்களுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் செயல்படுவர். உங்களில்
சிலருக்கு அயல்நாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு
இருக்கிறது. ஆடி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள்
கிடைக் கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
மாணவ-மாணவியர், படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். நீங்கள் விரும்பும்
பாடப்பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும்.கலைத் துறையினரே! வீண்
வதந்திகள் இருக்கவே செய்யும். மனம் தளராமல் இருங்கள். உங்களை விட வயதில்
குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும்.
மொத்தத்தில் இந்த தமிழ்ப் புத்தாண்டு, இடமாற்றத்தையும் வேலைச் சுமையையும் தந்தாலும், நல்லவர்களை இனம் கண்டு கொள்ள ஏதுவாக அமையும்.
பரிகாரம்
கோவை-பொள்ளாச்சி வழியில், ஈச்சனாரி எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிநாயகரை சதுர்த்தி திதி நாளில் வழிபட்டு வாருங்கள். நிம்மதி கிடைக்கும்.
மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)
எதிலும் யதார்த்தத்தை விரும்புபவர் நீங்கள்!
சூரியன், புதன் மற்றும் சுக்ரன் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம்
பிறப்பதால், உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அதிகாரிகளின் நட்பு
கிடைக்கும். கடினமான காரியங் களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.
பணப் புழக்கம் அதிகமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புதிய
வேலை கிடைக்கும்.
உங்கள் ராசியிலேயே வருடம் பிறப்பதால், ஆரோக் கியத்தில் கூடுதல் கவனம்
செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை,
முன்கோபம் வந்து நீங்கும். தோலில் நமைச்சல், தேமல், நரம்புச் சுளுக்கு
வரக்கூடும்.
வருடம் முழுவதும் சனி ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்,
புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிரிகளும் நண்பர்களாவார்கள்.
கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். புது பதவிக்கு
தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு
நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். வீடு,
வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் தீர்ப்பு
சாதகமாகும்.
செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் போது வருடம் பிறப்பதால்,
அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறந்த வர்கள்
பக்கபலமாக இருப்பார்கள்.
ராகு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்கள் உழைப்புக்கு உரிய பலன்
கிடைக்கும். பிரச்னைகளுக்கு உரிய தீர்வைக் காண்பீர்கள். தடைப்பட்ட
காரியங்கள் நல்லபடியாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், கேது 9-ல்
இருப்பதால், தந்தையின் ஆரோக் கியம் பாதிக்கப்படும். அவருடன் கருத்து
வேறுபாடு களும் ஏற்படக்கூடும். பிதுர்வழிச் சொத்தில் பிரச்னைகள்
ஏற்படக்கூடும். 26.10.16 முதல் 2.12.16 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல்
அமர்வதால், சொத்துப் பிரச்னைகள், சகோதர வகையில் மனத்தாங்கல், பழைய கடனை
நினைத்த கவலைகள் வந்து செல்லும்.
14.10.16 முதல் 7.11.16 வரை சுக்ரன் 6-ல் மறைவதால், கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள், பிள்ளைகளால் செலவுகள் வந்து போகும்.
1.8.16 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் இளைய
சகோதர வகை யில் பிணக்குகள் வரும். யாருக் காகவும் ஜாமீன் கையெழுத்திட
வேண்டாம். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை
குரு ராசிக்கு 4-ல் அமர்வ தால், உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும்.
அவ்வப்போது மன இறுக்கம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
வழக்கில் வழக்கறிஞரை மாற்ற நேரிடும். ஆனால் 17.1.17 முதல் 9.3.17 வரை
குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 5-ல் அமர்வதால், மனத்
தெளிவு உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான
முயற்சிகள் நல்லபடி முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
வியாபாரத்தில், புது முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள்.
பங்குதாரர்கள் உங்களுக்குக் கட்டுப்படுவர். சந்தை நிலவரத்தை அறிந்து
முக்கிய முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். கட்டுமானப்
பொருட்கள், பெட்ரோ கெமிக்கல், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம்
அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் குரு சாதக மாக இல்லாததால், உத்தியோகத்தில் மேலதிகாரிகளால்
ஒதுக்கப் படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உண்டாகும். சக ஊழியர்களின் இரட்டை
வேடத்தை புரிந்து கொள்வீர்கள். மூத்த அதிகாரி களைப் பற்றிய ரகசியங்களை
மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சிலருக்கு உத்தியோகத் தில்
இடமாற்றம் உண்டாகும். சித்திரை, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில்
பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
மாணவ-மாணவிகள் கடின மாக உழைத்து உயர்கல்வியில் வெற்றி பெறுவர். கலைத் துறை
யினருக்கு, புகழ் பெற்ற நிறுவனங் களில் இருந்து அழைப்பு வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை கடினமாக உழைக்க வைப்பதாக இருந்தாலும், தன்னம்பிக்கையால் தலை நிமிரச் செய்வதாக அமையும்.
பரிகாரம்
உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று, சிதம்பரம் அருகிலுள்ள புவனகிரிக்கு
சென்று, அங்கு அருளும் ஸ்ரீராகவேந்திரரை, நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்;
நன்மைகள் கூடும்.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)
தாயை தெய்வமாகப் போற்றுபவர்களே!
புத்தாண்டு பிறக்கும்போது உங்களின் யோகாதிபதி யான செவ்வாய் பூர்வ
புண்ணியஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், அதிகாரப் பதவியில்
இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்து பங்கைக் கேட்டு
வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இந்தப் புத்தாண்டு உங்கள்
ராசிக்கு விரயஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால், அலைச்சலுடன் ஆதாயம்
உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் 5-ம் இடத்திலேயே சனி அமர்ந்திருப்பதால், மனதில்
குழப்பமும் தடுமாற்றமும் இருந்தபடி இருக்கும். பிள்ளைகளை அனுசரித்துப்
போகவும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வருடம் பிறக்கும்போது
சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு
வரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்தப் பிணக்குகள்
நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க காரியங்கள் சாதகமாக
முடியும்.
3.12.16 முதல் 15.1.17 வரை செவ்வாய் ராசிக்கு 8-ல் மறைவதால்,
வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம்
வந்து போகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். 8.11.16
முதல் 3.12.16 சுக்ரன் 6-ல் மறைவதால், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள்,
தாயாருக்கு மருத்துவச் செலவுகள், கழுத்து வலி வந்து செல்லும். 1.8.16 வரை
குருபகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், மகிழ்ச்சி
யான சூழ்நிலை உண்டாகும். பண வரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைகட்டும். உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு
ராசிக்கு 3-ல் அமர்வதால், பண விஷயத்தில் கறாராக இருங்கள். புது முயற்சிகள்
தாமதமாகி முடிவடையும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஆனால், 17.1.17
முதல் 9.3.17 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 4-ல்
அமர்வதால், தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவசரப்பட்டு எந்தக்
காரியத்திலும் இறங்க வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
வருடம் முழுவதும் ராகு 2-லும் கேது 8-லும் நீடிப்பதால், குடும்பத் தில்
சலசலப்புகள் வரும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட
அனுமதிக்காதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வாகன விபத்துகள்
ஏற்படக்கூடும். சந்தேகத்தால் நல்ல நட்புகளையும் இழக்க நேரிடும்.
வியாபாரத்தில் சிறு சிறு நஷ்டங்கள் வந்து போகும். எதிர்பார்த்த ஆர்டர்
தாமதமாக வரும். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். தொழில்
ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாடிக்கை யாளர்களைத்
திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஏற்றுமதி – இறக்குமதி, லாட்ஜிங்,
வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
சித்திரை, வைகாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் லாபம் வரும். கடையை விரிவு
படுத்துவீர்கள்.
உத்தியோகத்தில், உங்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரி மாற்றப்படுவார்.
புது அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் செயல்பட வாய்ப்பு இருக்கிறது.
வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. வைகாசி,
புரட்டாசி, மார்கழி மாதங் களில் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.
எதிர்பார்த்த சலுகை களும், விரும்பிய இடத்துக்கே வேலை மாற்றமும் உண்டாகும்.
மாணவ-மாணவிகளே! படிப்பு மட்டுமல்லாமல் மொழியறிவுத் திறனிலும் கவனம்
செலுத்துவீர்கள். அறிவியல் சம்பந்தமான இடங் களுக்குச் சென்று வரும்
வாய்ப்பும் உண்டாகும். சிலருக்கு பள்ளி மாற வேண்டி இருக்கும்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். உங்களின் படைப்பு களைப் போராடி வெளியிட வேண்டி வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிறு சிறு கசப்பான அனுபவங்களைத் தருவதாகத்
திகழ்ந்தாலும், அனுபவ அறிவால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.
பரிகாரம்
தஞ்சாவூர் மாவட்டம், அழகாபுத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ
படிக்காசுநாதரை, பிரதோஷ நாளில் தரிசித்து வணங்குங்கள். நன்மைகள் உண்டாகும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)
அன்புக்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்!
புத்தாண்டு பிறக்கும்போது, உங்களின் யோகாதிபதி செவ்வாய் கேந்திர பலம்
பெற்று அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் உடல் நிலை
சீராகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு
சாதகமாகும்.
வருடம் பிறக்கும்போது, ராசிநாதன் சூரியனும், ஜீவனாதிபதி சுக்ரனும் 8-ல்
உச்சம் பெற்று அமர்ந்தி ருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 1.8.16 வரை ஜென்ம குரு தொடர்வதால்,
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால்
பிரிவுகள் வரக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. ஆனால், 2.8.16 முதல்
16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு 2-ம் வீட்டில்
அமர்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப
நிகழ்ச்சி கள் நல்லபடி நிறைவேறும். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில்
அமைதி நிலவும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. ஆனால், 17.1.17 முதல்
9.3.17 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 3-ல்
அமர்வதால், ஒரே நாளில் பல வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். புதிய
முயற்சிகள் தாமதமாகி முடியும்.
4.12.16 முதல் 29.12.16 வரை சுக்ரன் 6-ல் மறைவ தால், நரம்புச் சுளுக்கு,
சோர்வு, வீண் செலவு, வாகன விபத்து, கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு கள்
வந்து நீங்கும். வருடம் முழுவதும் அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், சின்னச்
சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத
செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி
வரும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
வருடம் முழுவதும் உங்கள் ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும்
தொடர்வதால், அடிக்கடி முன்கோபம் வரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமல்
பார்த்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள்
ஏற்படக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உங்களின் யோகாதிபதியான செவ்வாய் 16.1.17 முதல் 26.2.17 வரை 8-ல் மறைவதால்,
வரவுக்கு மிஞ்சிய செலவுகள், சகோதர வகையில் சங்கடங்கள், எதிலும்
நம்பிக்கையின்மை, வீடு, மனை வாங்குவது, விற்பதில் சின்னச் சின்ன இழப்புகள்,
மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங் கள் இருக்கும். வருடத்தின் மத்தியப்
பகுதியிலிருந்து ஓரளவு லாபம் வரும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம்
ஈட்டுவீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்
களைக் கவர்ந்திழுப்பீர்கள். என்றாலும் 4-ம் வீட்டில் சனி நிற்ப தால்,
பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். சில விஷயங்களுக்கு
நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். சினிமா, பதிப்புத்துறை,
ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகை களால் ஆதாயம் உண்டு. வைகாசி, ஆவணி, தை
மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். வங்கிக் கடன் கிடைத்து உங்கள் ரசனைக்கு
ஏற்ற இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டு.
என்றாலும் ஆனி, ஐப்பசி, தை மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும்.
உங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாகும். வேறு சில புது வாய்ப்புகளும் வரும்.
சம்பளம் உயரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து
விடுபடுவீர்கள்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் அலட்சியம் வேண்டாம். அன்றைய பாடங்களை அன்றே
படித்துவிடுவது நல்லது. விளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்
கூடும். கவனமாக இருக்கவும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெற வேண்டி
வரும்.
கலைத்துறையினர் விடா முயற்சியால் சாதித்துக் காட்டு வார்கள். அவர்களுடைய படைப்புத் திறன் வளரும்.
மொத்தத்தில் இந்த தமிழ்ப் புத்தாண்டு, முற்பகுதியில் சின்னச் சின்ன
சங்கடங்களை தந்தாலும், வருடத்தின் பிற்பகுதி வருங்காலத் திட்டங்களை
நிறைவேற்ற உகந்த வாய்ப்புகளைத் தருவதாக அமையும்.
பரிகாரம்
திருநள்ளாறு அருகிலுள்ள அம்பகரத்தூரில் அருளும் ஸ்ரீஅஷ்டபுஜ காளியை,
வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
அல்லல்கள் நீங்கும்.
கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)
எதிலும் தூய்மையை விரும்புபவர் நீங்கள்!
சந்திரன் 10-வது ராசியில் நிற்கும்போது புது வருடம் பிறப்பதால், உங்கள்
சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.
மதிப்பு மரியாதை கூடும். அரசால் அனுகூலம் உண்டு. புத்தாண்டு பிறக்கும்
நேரத்தில் தனாதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது
ராசியையும் பார்த்துக் கொண்டிருப்பதால், உங்களிடம் மறைந்து கிடந்த
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் நட்பு
கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். விலை உயர்ந்தப்
பொருட்கள் வாங்குவீர்கள்.
வருடத் தொடக்கத்தில் செவ்வாய் 3-ம் இடத்தில் வலுவாக நிற்பதால், தைரியம்
பிறக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். உடன்பிறந்தவர்கள் பக்க
பலமாக இருப்பார்கள். ராசிநாதன் புதன் வருடப் பிறப்பின்போது 8-ல்
மறைந்திருப்பதால், உறவினர், நண்பர்களின் அன்புத்தொல்லைகள் வந்து போகும்.
வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.
ராகு பகவான் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிலேயே தொடர்வதால், மாதக் கணக்கில்
தள்ளிப் போய் கொண்டிருந்த வேலைகள் முடிவடையும். எதிர்பாராத பயணங்களால்
அலைச்சல் அதிகரிக்கும். அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச்
சென்று வருவீர்கள். கேது 6-ம் வீட்டில் நீடிப்பதால், சுப நிகழ்ச்சிகளால்
வீடு களை கட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கு சாதகமாகும்.
1.8.16 வரை குரு ராசிக்கு 12-ல் நிற்பதால், எடுத்த வேலைகளை முடிப்பதற்குள்
அலைச்சல் அதிகமாகும். பணம் வந்தாலும் செலவுகளும் தொடரும். ஆனால், 2.8.16
முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு உங்கள் ராசிக்கு
ஜன்ம குருவாக வருவதால், உடல் நலம் பாதிக்கும். மருத்துவப் பரிசோதனை
செய்துகொள்வது நல்லது. புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள்
எடுக்கவேண்டாம். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு அதிசாரத்திலும்,
வக்ரகதி யிலும் ராசிக்கு 2-ல் அமர்வதால், அமைதி உண்டாகும். கணவன்
-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு
வரும். நோய் குணமாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். அவர்
உங்களின் தியாக உள்ளத் தைப் புரிந்துகொள்வார். பேச்சில் கனிவு பிறக்கும்.
27.2.17 முதல் 11.4.17 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8-ல் மறைவதால்,
சின்னச் சின்ன ஏமாற்றங்கள், பண இழப்புகள், சகோதர வகையில் மனக்கசப்புகள்,
வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் ஏற்படும். வழக்கில் தீர்ப்பு
தாமதம் ஆகும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்கள்
வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை பாக்கியம் கிடைக் கும். மகளுக்கு
நல்ல வரன் அமை யும். பூர்வீகச் சொத்தில், உங்கள் ரசனைக்கேற்ப சில
மாற்றங்கள் செய்வீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களை
எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டு வார்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும்
வாய்ப்பு வரும்.
வியாபாரத்தில் சில தந்திரங் களைக் கற்றுக் கொள்வீர்கள். வி.ஐ.பி-களும்
வாடிக்கையாளர் களாக அறிமுகமாவார்கள். ஆனி, ஆடி, மாசி மாதங்களில் வியாபாரம்
செழிக்கும். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உணவு,
ஸ்பெகுலேஷன், சிமென்ட்,
கல்விக் கூடங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் போராட்டங் கள் அதிகரிக்கும். வேலையில் நீடிப்பது பற்றி மனக்
குழப்பம் உண்டாகும். உயர் அதிகாரிகள் உங்களை அலட்சியப்படுத்தினா லும், சக
ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்களில் வேலை
யில் ஆர்வம் உண்டாகும். சிலர் புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்
படுவீர்கள்.
மாணவ-மாணவிகள், படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நினைவாற் றல் கூடும்.
கலைத் துறையினரின் படைப்புகள் பலராலும் பாராட்டப் படும். புது
வாய்ப்புகளும் வந்து சேரும்.
மொத்தத்தில் இந்த புத்தாண்டு சிற்சில தருணங்களில் சுகவீனங் களை அளித்தாலும் வசதி, வாய்ப்பு களை அள்ளிக்கொடுப்பதாகவும் அமையும்.
பரிகாரம்
சுவாதி நட்சத்திர நாளில், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் அருளும் ஸ்ரீயோக
நரசிம்மரை, வணங்கி வாருங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
துலாம் (சித்திரை 3,4-ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்)
இன்ப துன்பங்களை சமமாகக் கருதுபவர் நீங்கள்!
உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால்,
மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக
இருக்கும். பிரபலங்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வீடு மனை
வாங்கும் யோகம் உண்டாகும். புது பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்
படுவீர்கள். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் புதன் 7-ல் அமர்ந்து உங்கள்
ராசியைப் பார்ப்பதால் திருமண பேச்சுவார்த்தை சாதகமாகும்.
வருட ஆரம்பத்தில் உங்களுடைய ராசியதிபதி சுக்ரன் உச்சம் பெற்று
அமர்ந்திருப்பதால், மகிழ்ச்சி உண்டாகும். ஆனால், சுக்ரன் 6-ல்
மறைந்திருப்பதால், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள், கணவன் – மனைவிக்கு
இடையில் மனவருத்தம் வந்து நீங்கும்.வருடம் முழுவதும் பாதச் சனி தொடர்வதால்,
குடும்பத் தில் அவ்வப்போது சச்சரவுகள் ஏற்படும்; பொறுமை அவசியம்.
வழக்குகள் தள்ளிப் போகும். எவருக்கும் சாட்சிக் கையெழுத்துப் போடவேண்டாம்.
பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். பூர்விகச் சொத்தில் கவனம் தேவை. மறதியால்
விலையுயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.
குரு பகவான் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால்,
பிரபலங்கள் மற்றும் நல்லவர்களின் நட்பால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு
கிடைக்கும். பழைய நகையை மாற்றி, புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். சுப
நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசாங்க
விஷயங்கள் சாதகமாக முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால், 2.8.16 முதல் 16.1.17
வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல்
மறைவதால், வீண் விரயம், ஏமாற்றம், எதிலும் தடை தாமதங்கள் வந்து செல்லும்.
கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
அவ்வப்போது கனவுத் தொல்லை அதிகரிக்கும்.
17.1.17 முதல் 9.3.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ஜன்ம
குருவாக வருவதால், உடல் நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்குள்
சச்சரவுகள் வரக்கூடும்.
வருடம் முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தி லேயே
தொடர்வதால், செல்வம், செல்வாக்கு கூடும். கொடுத்த பணம் திரும்ப வரும். ஷேர்
மூலமாகவும் பணவரவு உண்டு. சகோதர வகையில் ஒற்றுமை வலுப்படும்.
வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் –
மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன திருமண முயற்சிகள்
கூடிவரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பிற மொழி பேசுபவர்களால் யோகம்
உண்டாகும். ஆனால், கேது 5-ல் இருப்பதால், வீண் குழப்பங்கள், பிள்ளைகளால்
பிரச்னைகள் தோன்றும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படும். மகளின் திருமண
விஷயத்தில் அவசரம் வேண்டாம்.
27.1.17 முதல் வருடம் முடியும் வரை சுக்ரன் ராசிக்கு 6-ல்
மறைந்திருப்பதால், சளித் தொந்தரவு, தலைவலி, மூச்சுப் பிடிப்பு வந்து
செல்லும். மின்சார சாதனங்கள் பழுதாகும். வாழ்க்கைத் துணைக்கு வயிற்று வலி,
தைராய்டு பிரச்னை வந்து போகும்.
வியாபாரத்தில், புதிய முதலீடு கள் செய்வீர்கள். சிலர், கடையை சொந்த
இடத்துக்கு மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
கமிஷன், ஸ்பெகு லேஷன், அழகுசாதனப் பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரி
பாகங்களால் லாபம் அடைவீர்கள். ஆடி, ஆவணி, மார்கழி, பங்குனி மாதங்களில் புது
ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில்
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும்.
மாணவ-மாணவிகளுக்கு விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில்
இடம் கிடைக்கும். மதிப்பெண் கூடும். கலைத் துறையினருக்கு பெரிய
நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களுக்கு சின்னச் சின்ன ஏமாற்றங்களை தந்தாலும், சாதனை கள் படைக்கத் தூண்டுவதாக அமையும்.
பரிகாரம்
சனிக்கிழமை அன்று, காஞ்சியில் அருளும் ஸ்ரீபாண்டவதூத பெருமாளை, துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்; சங்கடங்கள் குறையும்.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் அனுஷம், கேட்டை)
சவால்களை ஏற்று சாதிப்பவர் நீங்கள்!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி பெற்று இருக்கும்போது
புத்தாண்டு பிறப்பதால், இடையூறுகளைக் கடந்து சாதிப்பீர்கள். அதிகாரப்
பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது
லாபகரமாக முடியும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். ஆனால், சனியின்
சேர்க்கை இருப்பதால், அலர்ஜி, ரத்தசோகை, முன்கோபம் வந்து செல்லும்.
உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு
பிறப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பணப் பற்றாக்குறையை
சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வருடம் பிறக்கும்போது சூரியனும், சுக்ரனும்
சாதகமாக இருப்பதால், எதிர்ப்புகள் இல்லாமல் போகும். இங்கிதமாகப் பேசி
காரியம் சாதிப்பீர்கள். அரசாங்க காரியங்கள் சாதகமாகும்.
வருடம் முழுவதும் ஜன்மச் சனி தொடர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கணவன் – மனைவிக்கு இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்தப் பார்ப்பார்கள்.
சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது, தேவையற்ற சங்கடங்களைக்
குறைக்கும்.
1.8.16 வரை குரு 10-ல் தொடர்வதால், வேலைச் சுமையால் அசதி, சோர்வு வந்து
நீங்கும். விலை உயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். யாரையும் எளிதில்
நம்பி ஏமாற வேண்டாம். மறைமுக அவமானங் கள் வந்து நீங்கும். 2.8.16 முதல்
16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குருபகவான் லாப வீட்டில்
அமர்வதால், தடைகள் நீங்கும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு
அதிகரிக்கும். இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள்.தடைப்பட்ட
சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம்
உண்டாகும். மூத்த சகோதர வகையில் ஆதரவு பெருகும். ஆனால், 17.1.17 முதல்
9.3.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்கு
12-ல் மறைவதால், திடீர் பயணங்களும் சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் ராகு 10-ல் தொடர்வதால், கடினமான காரியங் களையும் சுலபமாக
செய்து முடிப்பீர்கள். நிர்வாகத் திறன் கூடும். குடும்பத்தில் அமைதி
திரும்பும். சில அவமானங்கள் ஏற்படக்கூடும். திறமையும் உழைப்பும் இருந்தும்
உரிய பலனைப் பெற முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.
கேது 4-ம் வீட்டிலேயே தொடர்வதால், அவ்வப்போது தன்னம்பிக்கை குறையும்.
தாயாரின் உடல்நலம் பாதிக்கக் கூடும். கடன் விஷயத்தில் எச்சரிக்கையாக
இருக்கவும். மின்சார சாதனங்கள் பழுதாகும். அரசு காரியங்கள் தாமதமாகும்.
சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவு களைக் கற்றுக் கொண்டு கூடுதல் லாபம்
அடைவீர்கள். பெரிய முதலீடுகள் இப்போதைக்கு வேண் டாம். வாடிக்கையாளர்களிடம்
கனிவு தேவை. வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராடவேண்டி இருக்கும். உணவு,
இரும்பு, கன்சல்டன்சி, ரியல் எஸ்டேட் மற்றும் மர வகைகளால் ஆதாயம் உண்டு.
சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் திடீர் லாபம் உண்டு.
2.8.16 முதல் உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை
குறையும். என்றாலும் ராகு 10-ல் நிற்பதால், மூத்த அதிகாரிகளை
திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள்
அதிகமாகும். சில நேரங்களில் வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் ஏற்படும்.
அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம். சித்திரை, ஆவணி, புரட்டாசி, தை மாதங்
களில், தள்ளிப்போன பதவி உயர்வும் சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரும்.
மாணவ-மாணவிகளுக்கு, படிப்பில் கூடுதல் உழைப்பு தேவை. விளையாட்டு, பொது
அறிவுப் போட்டிகளில் பாராட்டும் பரிசும் கிடைக்கும். கலைத் துறையினரின்
தடைப்பட்டு கிடந்த படைப்புகள், இப்போது ரிலீஸாகும். அதேநேரம், வீண்
பழிகளும் விமர்சனங்களும் அதிகரிக்கும். அதற்காக வருந்த வேண்டாம்.
மொத்தத்தில், இந்தப் புத்தாண்டு ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு வேலைச்
சுமையையும், பரபரப்பையும் தரும் என்றாலும், உங்களுக்கென்று தனி
அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்
சதுர்த்தசி அன்று ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று, அங்கு அருளும்
ஸ்ரீ மகுடேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடுங்கள். விக்கினங்கள்
நீங்கும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
முயற்சியை எப்போதும் கைவிடாதவர் நீங்கள்!
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரன் இருக்கும் போது, புது வருடம்
பிறப்பதால், உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள்
அமையும். தடைப்பட்டு வந்த திருமணம் உடனே முடியும். கணவன் – மனைவிக்கு
இடையில் அந்நியோன்யம் கூடும்.
வருடம் பிறக்கும்போது சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், கனிவாகப் பேசி
காரியம் சாதிப்பீர்கள். பணப் பற்றாக்குறையைப் போக்க கூடுதலாக
உழைப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும்.
1.8.16 வரை உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால், பிரச்னைகளைத்
தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு
வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தாயாரின் ஆரோக்கியம்
மேம்படும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை
மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு 10-ம் வீட்டில் நுழைவதால், சில
ஏமாற்றங் களைச் சந்திக்க நேரிடும். உங்களின் திறமையையும் உழைப்பையும்
மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வர். எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாக
முடிக்கவும்.
ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும்,
வக்ரகதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள்
பெருகும். சுபகாரியங்கள் நடைபெறும். தாயின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத
பணவரவுக்கும் இடம் உண்டு. மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் ராகு பகவான் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தன்னம்பிக்கை
பிறக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வீடு கட்ட, தொழில் தொடங்க
வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தந்தைக்கு ரத்த அழுத்தம், கை, கால் வலி
வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையாருடன்
மனத்தாங்கல் வரும். செலவுகளும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்னையில்
இப்போது தலையிட வேண்டாம்.
ஆனால், கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. இளைய சகோதர வகையில் பிணக்குகள்
நீங்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். கௌரவப் பதவிகள் வரும். வருடம்
முழுவதும் விரயச் சனி தொடர்வதால், மனச் சஞ்சலம் உண்டாகும். எந்த ஒரு வேலையை
யும் போராடி முடிக்கவேண்டி வரும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நீங்களே முன்னின்று நடத்துவீர்கள்.
திடீர்ப் பயணங்கள் உங்களை அலைக்கழிக்கும். ஒரு சிக்கல் தீர்ந்தது என்று
நினைக்கும்போது புதிதாக மற்றொரு சிக்கல் ஏற்படும்.
வியாபாரத்தில், வாடிக்கையாளர் களின் ரசனைகளுக்கு ஏற்ப முதலீடு செய்வது
நல்லது. ஏற்றுமதி – இறக்குமதி, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம்
அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பர். கடையை வேறு
இடத்துக்கு மாற்று வீர்கள். வைகாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் லாபம்
அதிகரிக்கும்.
2.8.16 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால், உத்தியோகத்தில்
பொறுப்பு அதிகமாகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு
நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துகொள்வார்கள். மறைமுக எதிர்ப்புகளும்
இருக்கும். சிலருக்கு, கட்டாய ஓய்வு எடுக்கவேண்டிய சூழலும் உருவாகலாம்.
அதுவும் நன்மைக்கே! வைகாசி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில்
அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும்.
மாணவ-மாணவிகள், ஒரு முறைக்கு பலமுறை படிப்பதும், படித் ததை
எழுதிப்பார்ப்பதும் அவசியம்.பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி
செய்வார்கள். கலைத் துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் கொஞ்சம் விட்டுக்
கொடுத்துப் போகவும். வேற்றுமொழி வாய்ப்புகளும் வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களைக் கொஞ்சம் செம்மைப் படுத்திக் கொள்ள
உதவுவதுடன், சமூகத்தில் அனுசரித்துப் போகும் கலையை உங்களுக்குக் கற்றுத்
தருவதாகவும். அமையும்.
பரிகாரம்
நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயரை, மூலம் நட்சத்திர நாளில், வெற்றிலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். கஷ்டங்கள் குறையும்.
மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)
மனதில் சரியெனப்பட்டதை தயங்காமல் செய்பவரே!
செவ்வாய், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்
நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத
பணவரவு உண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் கம்பீரம்
கூடும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். உடன்
பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். கமிஷன்
மூலம் பணம் வரும்.
சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சின்னச் சின்ன
வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில்
செல்வாக்கு கூடும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரன் இருக்கும்போது, புது வருடம் பிறப்பதால், சில
சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.
பயணங்களும், செலவுகளும் துரத்தும். சிலருக்கு வேற்று மாநிலம் அல்லது
வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது
கலங்குவீர்கள். வருடம் முழுவதும் ராகு 8-லும், கேது 2-லும் நீடிப்பதால்,
காலம் அறிந்து செயல்படுவது அவசியம். செலவுகள் தொடரும். சிலருக்கு அயல்நாடு
சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். கணவன் – மனைவிக்கு இடையில், சிலர் பிரச்னை
ஏற்படுத்தப் பார்ப்பார்கள். சிறு சிறு விபத்துக்கள் ஏற்படக்கூடும். வழக்கு
விவகாரங்களில் எச்சரிக்கையுடன் செயல் படவும். சிலருக்கு புண்ணிய
தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.
வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் தொடர்வதால்,
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். ஓரளவு சேமிப்புக்கும்
இடமுண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில்
திருமணம், வளைகாப்பு, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம்
கிடைக்கும். ரசனைக்கு ஏற்ப புது வீடு வாங்குவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில்
உயர்கல்வி அமையும். மனைவி வழியில் மரியாதை கூடும். சிலருக்கு கௌரவ பதவிகள்
தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா
கிடைக்கும்.
1.8.16 வரை குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம்
அடைவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிக்க இயல
வில்லையே என ஆதங்கப்படுவீர்கள். ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும்
10.3.17 முதல் 13.4.17 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில்
நுழைவதால், வீண் குழப்பங் கள், தடுமாற்றங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
திடீர் பணவரவு உண்டா கும். குடும்பத்தில் சச்சரவுகள் குறையும். பூர்வீகச்
சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு
பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால்,
அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுவீர்கள். வாக்கை காப்பாற்ற முடியாமல்
போகும். உங்களுடைய உழைப்புக்கு மற்றவர்கள் உரிமை கொண்டாடு வார்கள்.
தன்னம்பிக்கை குறையும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக் கொள்வீர்கள். சந்தை நிலவரத்தை
அவ்வப்போது கவனித்து அதற்கேற்ப செயல்படுங் கள். வேலையாட்களின் குறை,
நிறைகளை பொறுமையாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். விளம்பரங் களின் மூலம்
உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மூலிகை, கட்டட உதிரி பாகங்கள், துணி,
புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை
மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில், உயரதிகாரி களுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும்
கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். ஆனி, ஐப்பசி, கார்த்
திகை, பங்குனி மாதங்களில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.
மாணவ-மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. கலைத் துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
மொத்தத்தில் இந்த துர்முகி வருடம், மாறுபட்ட அணுமுறையால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.
பரிகாரம்
அஷ்டமி திதி அல்லது திங்கட் கிழமைகளில், சமயபுரம் சென்று, மாரியம்மனுக்கு
எலுமிச்சை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்; இன்னல்கள் குறையும்.
கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம் சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)
பிரதிபலன் பாராமல் உதவுபவர் நீங்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும்
நேரத்தில், இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். அரசால் அனுகூலம்
உண்டாகும். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா வரும்.
கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்பு உணர்வுகள் நீங்கும். மனைவிவழியில்
ஆதரவு பெருகும். இழுபறியான வேலைகள் முடிவடையும்.
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறப்பதால், அடிப்படை
வசதிகள் உயரும். பிள்ளை களால் மதிப்பு கூடும். மகளின் திருமணம் கூடிவரும்.
மகனின் உயர்கல்வி, வேலை போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். பூர்வீகச்
சொத்தை சீர்படுத்துவீர்கள்.
வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் இடத்திலேயே தொடர்வதால்,
உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது
முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன்
அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். வீடு கட்ட, வாகனம்
வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். வருடம்
பிறக்கும் நேரத்தில் செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று 10-ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால், புது வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடனும்
அனுசரணையுடனும் நடந்துகொள்வார்கள். சிலருக்கு சொந்தமாக வீடு, மனை வாங்கும்
யோகமும் உண்டாகும்.
1.8.16 வரை குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், உங்களின்
திறமைகள் வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு
வரும். திருமணம் கூடி வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை, குரு
ராசிக்கு 8-ல் சென்று மறைவதால், வீண் அலைச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை
குறையும். செலவு கள் அதிகமாகும். சில வேலை களைப் போராடி முடிக்க வேண்டி
வரும். மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும். ஆனால்,
17.1.17 முதல் 9.3.17 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு
9-ல் அமர்வதால், தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு
கிடைக்கும்.
வருடப் பிறப்பு முதல் ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலேயே
ராகு தொடர்வதால், வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்
கூடும். மனைவிவழி உறவினர் களுடன் மனத்தாங்கல் வரும். உங்களைவிட வயதில்
குறைந்த வர்கள் மூலமாக ஆதாயம் அடைவீர் கள். கேதுவும் உங்கள் ஜன்ம
ராசியிலேயே தொடர்வதால், ஆரோக்கியம் பாதிக்கும். இரவு நேர பயணங்களைத்
தவிர்க்கவும்.
வியாபாரத்தில், போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். பெரிய
முதலீடுகள் செய்ய வேண்டாம். எவருக்கும் முன்பணம் தர வேண்டாம். புது தொழில்,
புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர
வகை களால் ஆதாயம் அடைவீர்கள். இயன்ற வரையிலும் கூட்டுத் தொழிலைத்
தவிர்க்கவும். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். ஆடி,
கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த
லாபம் வரும்.
உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என ஆதங்கம்
உண்டாகும். சூழலுக்கு ஏற்ப உங்களுடைய கருத்துக்களை மேலதிகாரிகளிடம் பதிவு
செய்வது நல்லது. நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைகூட போராடி பெற வேண்டி
வரும். சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில்
முன்னேற்றம் கிடைக்கும்.
மாணவ-மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உண்டு. ஆகவே,
படிப்பில் கவனம் செலுத்தவும். கலைத் துறையினர், சம்பள விஷயத்தில் கறாராக
இருக்கவும். பெரிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த புத்தாண்டு, ஆரோக்கியக் குறைவையும், காரியத்
தடங்கல்களையும் தந்தா லும், தொடர் முயற்சிகளால் இலக்கை எட்டிப்
பிடிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்
அஷ்டமி திதி நாளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அருளும் யோக
பைரவரைத் தரிசித்து, தேங்காய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். சங்கடங்கள்
நீங்கும்.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
பிறர் கஷ்டங்களைத் தனதாகக் கருதும் பண்பாளரே!
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் துர்முகி வருடம் பிறப்பதால், கனவுகள்
நனவாகும். தள்ளிப்போன காரியங்கள் விரைந்து முடிவடையும். பிரபலங்கள்
நண்பர்களாவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன்
இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.
வருடம் முழுவதும் ராகு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால்,
பிரச்னைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புது
பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மழலை
பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய
முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வழக்கு சாதகமாகும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில்
வேலை கிடைக்கும். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக்
கற்றுக் கொள்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
1.8.16 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6-ம் வீட்டில்
மறைந்திருப்பதால், சில வேலைகளை போராடி முடிப்பீர்கள். வீண் சந்தேகத்தால்
நல்லவர் களின் நட்பை இழக்க நேரிடும். மற்றவர்கள் விவகாரத் தில் தலையிட
வேண்டாம். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை
குரு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், உங்களின்
திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம்
உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். காணாமல் போன முக்கிய
ஆவணம் ஒன்று கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதியவரின்
நட்பால் உற்சாகம் அடைவீர்கள். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு
அதிசாரத் திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 8-ல் அமர்வதால், குடும்பத்தினரு
டன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்கள் அதிகமாகும்.
சிலர், உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவர்; பொறுமை அவசியம்.
இந்த வருடம் முழுவதும் சனி ராசிக்கு 9-ல் நிற்பதால், மற்றவர் களால் செய்ய
முடியாத காரியங் களை முடித்துக் காட்டுவீர்கள். மதிப்பு கூடும். பழைய
பிரச்னைகள், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய
நிறுவனத் தில் வேலை கிடைக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை
கிடைக்கும். ஆனால், தந்தையுடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச் சுளுக்கு,
மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். பிதுர்வழி
சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
இந்தப் புத்தாண்டு செவ்வாய், சுக்ரன், புதன் ஆகிய கிரகங்கள் சாதகமாக
இருக்கும் நேரத்தில் பிறப்பதால், செயலில் வேகம் கூடும். கலை, இலக்கியத்தில்
ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறந்த வர்களின் கோபம் குறையும்.
வியாபாரத்தில் இழப்புகளைச் சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் லாபம்
ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கூடிவரும்.சிலர் சொந்த இடத்துக்கே
கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாட்ஜிங், ஏற்றுமதி-இறக்குமதி
வகைகளால் லாபம் அடைவீர்கள். வைகாசி, ஆவணி, தை, மார்கழி மாதங்களில் பழைய
சரக்குகள் விற்றுத் தீரும். 2.8.16 முதல், உத்தியோகத்தில் ஏற்றம்
உண்டு.தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள்
முக்கியத்துவம் தருவர். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் புது பொறுப்புக்கும்,
பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.
மாணவ-மாணவிகளுக்கு, படிப்பில் முன்னேற்றம் உண்டு. தேர்வில் எதிர்பார்த்தபடி
மதிப்பெண் வர வாய்ப்பு உண்டு. விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள்.
கலைத் துறையினருக்கு, அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம்
ரிலீசாகும். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய
நிறுவனங்கள் உங்களை அழைக்கும்.
மொத்தத்தில் இந்த துர்முகி வருடம், அனைத்திலும் உங்களை வெற்றி பெற வைப்பதுடன், பணம், பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்
ஏகாதசி தினங்களில், திருச்சி மாவட்டம், உத்தமர் கோவிலுக்குச் சென்று, ஸ்ரீபுருஷோத்தமனை தரிசித்து வணங்கி வாருங்கள். நன்மைகள் கூடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...