நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவர்கள்
வேறு பள்ளியில் சேர, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.நாமக்கல்
மாவட்டத்தில் அங்கீகாரம்,தடையின்மை சான்று இல்லாமல் இயங்கி வந்த, 13பள்ளி
விவரங்களை நேற்று,சி.இ.ஓ.,கோபிதாஸ் வெளியிட்டார்.
இதுகுறித்து,அவர் கூறியதாவது:
அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த, 13பள்ளிகளுக்கும்,கடந்த ஜூன் மாதமே,தடையில்லா சான்று,அங்கீாரம் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால்,கடந்த, 10மாதங்களாக எவ்வித சான்றும் அவர்கள் பெறவில்லை. மேற்கொண்டும் அவர்கள் சான்றிதழ்களை பெறவில்லை என்றால்,பள்ளியை முழுமையாக மூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல்,இன்னும் சில பள்ளிகள் மெட்ரிக்குலேஷன் அனுமதி மட்டும் வைத்துக்கொண்டு,சி.பி.எஸ்.இ., -ஐ.சி.எஸ்.இ.,இருப்பதாக மாணவர் சேர்க்கை செய்து வருவதாகவும் புகார்கள் உள்ளன.அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் இல்லாத பள்ளியில் படித்த மாணவர்கள் அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு,மாணவர்களை சேர்ப்பதில் பிரச்னை ஏற்பட்டால்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்த விவரத்தை,சி.இ.ஓ.,அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பெற்றோர்,இவ்விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விண்ணப்பிப்பது எப்படி?
சி.பி.எஸ்.இ., -ஐ.சி.எஸ்.இ.,பள்ளிகளை பொறுத்தவரை,மத்திய பள்ளி கல்வித்துறை தான் அங்கீகார சான்று தரவேண்டும். அதற்கு முன்பாக மாநில பள்ளி கல்வி துறையிடம் (என்.ஓ.சி.,)தடையில்லா சான்று பெறவேண்டும். கட்டட அனுமதி,நிலம்,பள்ளி நிர்வாகம் ஆகியவை குறித்து,சப்-கலெக்டர்,சி.இ.ஓ.,கொடுக்கும் ஆவணங்களை வைத்து தான்,மாநில பள்ளி கல்வி துறை தடையில்லா சான்று வழங்கும். அதன்பின்,மத்திய பள்ளிகல்வித்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக அமைக்கப்பட்ட குழு நேரில் ஆய்வு செய்து அங்கீகார சான்று அளிக்கும். இதற்கு காலதாமதம் ஆனாலும்,தடையில்லா சான்று இருந்தால் கூட மாணவர் சேர்க்கை செய்துகொள்ளலாம். தற்போது,மாநில கல்வித்துறையின் தடையில்லா சான்று அவசியம் இல்லைஎன,கூறப்பட்டாலும்,சி.இ.ஓ.,சப் - கலெக்டர் வழங்கும் ஆவணங்களுடன் தான்,அங்கீகார சான்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...