ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும், குழந்தைகள் மையங்களில், மின் வசதி இல்லாத, 43 ஆயிரத்து, 345 குழந்தைகள் மையங்களுக்கு, 27.21 கோடி ரூபாயில், மின் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதோடு, மின் விசிறி, மின் விளக்கு பொருத்தப்படும்.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக, குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுப்புற சுகாதாரத்தை பேணவும், குழந்தைகளிடம் இளம் வயதிலேயே கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், 29 ஆயிரத்து, 272 குழந்தைகள் மையங்களில், 23.78 கோடி ரூபாயில், குழந்தை நேய கழிப்பறைகள் அமைக்கப்படும். இவை, குழந்தைகள் பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்படும்.சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் கீழ் இயங்கும், சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில், 28 ஆயிரத்து, 596 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவை அனைத்தும், விரைவில் நிரப்பப்படும். 110 விதியின் கீழ், இந்த அறிவிப்புகளை, முதல்வர் ஜெயலலிதா, 2011 செப்டம்பர் 12ல், சட்டசபையில் அறிவித்தார்.- இதில், சில மையங்களில் ஒப்புக்கு, மின் வசதி செய்யப்பட்டாலும், பெரும்பாலான மையங்களில், அவை இன்னும்செயல்படுத்தவில்லை. காலி பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பும், ஐந்து ஆண்டுகள் ஆகியும், அறிவிப்புகளாகவே உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...