மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தவறியதால், வேளாண்மைத்
துறையில், 15 ஆண்டுகளாக வேலை செய்த, 110 பட்டதாரி பணியாளர்கள்,
முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நீர்பாசன வசதி இல்லாத தரிசு நிலங்களை மேம்படுத்தி, சாகுபடிக்கு
உகந்த நிலமாக மாற்றுவதற்காக, மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன்,
2002ம் ஆண்டு, தரிசு நில மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, 2006ம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை, நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டுவருகிறது.இதன்மூலம், நீராதாரங்களை மேம்படுத்துவது, மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்காக, சிறு சிறு தடுப்பணைகளை அமைப்பது, தனியார் நிலங்களில் நீராதார வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டன.இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் இந்த திட்டத்துக்கான நிதியை, மத்திய அரசு 50 சதவீதம் குறைத்துள்ளது. இந்த திட்டத்துக்கான நிதியை முழுமையாக பெறுவதற்கு, தமிழக அரசு எந்த முயற்சியையும்எடுக்கவில்லை.மேலும், விவசாயிகளுக்கு நேரடியாக பயன்படும் நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தை செயலிழக்க செய்யும் விதமாக, இந்த திட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்களில், ஆட்குறைப்பு செய்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.அதன்படி, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் வேளாண் பொறியாளர், வேளாண் வியலாளர், சமூக வியலாளர் என்ற பணி நிலைகளில், 700 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதில், கடந்த 1ம் தேதி முதல் 110 பேர், முன்னறிவிப்பு இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 25 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான பெயர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக வேளாண் துறை வட்டாரங்களில் இருந்து, தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கிறது.கடந்த 15 ஆண்டுகளாக வேளாண் துறையில், ரூ.7 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை குறைந்த ஊதியத்தில் பணியாற்றியவர்களை, முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென பணிநீக்கம் செய்திருப்பது, ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும், அந்தந்த துறைகளில் உயர் கல்வித்தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, 15 ஆண்டுகளாக வேலை செய்ததால், விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்று, நம்பிக்கையுடன் இருந்தவர்களின் தலையில், பணி நீக்க உத்தரவு பேரிடியாகஇறங்கியிருக்கிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...