பிளஸ்
2 பொதுத் தேர்வை தொடர்ந்து, 10ம் வகுப்பு அறிவியல் தேர்விலும், வேதியியல்
பாட கேள்விகள், மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தின.
'ஆல்கஹால்' குறித்த
கேள்வி, மாணவர்களை குஷிப்படுத்தியது.சமச்சீர் கல்வி அமலான பின், 10ம்
வகுப்பு அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு புகுத்தப்பட்டது. பொதுத்
தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே வினாத்தாள் வடிவமைக்கப்பட்டது.
கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் கேள்வித்தாள் எளிதாக இருந்ததால், 'சென்டம்' வாங்கியோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியது. அதனால், பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுக்கு கடும் போட்டி ஏற்பட்டது.
எனவே, அறிவியல் பாடத்தில் மாணவர்களை வடிகட்டும் வகையில், பாடத்தின்
பின்பகுதி கேள்விகளில், செய்முறை கேள்விகள் அதிகரிக்கப்பட்டன. ஐந்து மதிப்பெண்ணில் மட்டும் கூடுதல் கேள்விகள் இடம் பெற்றன.
இந்த நிலையில், 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. இதில், பாடத்தின் உள்பகுதியில் இருந்து, ஐந்து மதிப்பெண்களில், இரண்டு; ஒரு மதிப்பெண்ணில், நான்கு கேள்விகள் இடம் பெற்றன.
ஐந்து மதிப்பெண்ணில், வேதியியல் பாட புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து, 'ஐசோடோப்பு'கள் குறித்த கேள்வி இடம் பெற்றது. அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.
ஆனால், அதற்கு மாற்றாக இடம் பெற்ற, 53வது கேள்வி, மாணவர்களை குஷிப்படுத்தியது. அதாவது, 'ஆல்கஹாலை' பருகுவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து கேள்வி இடம் பெற்றது.
அதனால், சமூக அறிவியல் பாடம் போல், 'டாஸ்மாக்' குறித்தும், மது விற்பனை, மதுவால் ஏற்படும் பிரச்னைகள், மனித உயிருக்கான ஆபத்து, விபத்து அதிகரிப்பு போன்றவற்றை எழுதியதாக மாணவர்கள் பலர் தெரிவித்தனர்.
எது சரியான விடை?
கேள்வித்தாள் எளிதாகவே இருந்தது. ஐந்து மதிப்பெண்ணில், கணிதம் தொடர்புள்ள கேள்விகள் எதிர்பார்க்கப்பட்டன. மாறாக, வேதியியல் கேள்விகள் இடம்
பெற்றன. 'ஆல்கஹால்' குறித்த கேள்விக்கு, மதுவை பருகுவதால், உடல் உறுப்புகளுக்கு மருத்துவ ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை குறித்து எழுதினால் தான், அது புத்தகத்தில் உள்ள சரியான விடையாகும். பேட்ரிக் ரைமண்ட், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர், நல்லமனார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...