பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. நடப்பு கல்வியாண்டில், தேர்வுகள் அனைத்தும் எளிமையாக இருந்ததால்,மாணவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
கடந்த மார்ச், 15ம் தேதி தொடங்கிய, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சேலம் மாவட்டத்தில், 140 தேர்வு மையங்களில், 52 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், நேற்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. ஒன்றிரண்டு வினாக்கள், பாடத்தின் உள்பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்தாலும்,மாணவர்களுக்கு தேர்வு எளிதாகவே அமைந்தது.
இதுவரை நடந்த தேர்வுகள் அனைத்தும் எளிமையாக இருந்ததால், நிறைவு நாளான நேற்று, மாணவ,மாணவியர் அதிக உற்சாகம் அடைந்து, கலர் பொடிகளை பூசியும், வாழ்த்து கூறியும் கொண்டாடினர். முன்னதாக சேலம் கலெக்டர் சம்பத், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, கொண்டலாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினார். சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரியும் உடன் இருந்தார்.
பிட் அடித்த 3 பேர்:
நேற்று நடந்த சமூக அறிவியல் தேர்வில், இரண்டு தனித்தேர்வர், ஒரு பள்ளி மாணவன் என மூன்று பேர் பிட் அடித்து, கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்களின் விடைத்தாள் பறிமுதல் செய்யப்பட்டு,இயக்குனரகத்துக்கு மேல்நடவடிக்கைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...