தமிழகம்,
புதுவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற 10-ஆம் வகுப்பு
ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில், குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான வினாக்கள்
இருந்ததால், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, தேர்வுத் துறை இயக்குநருக்கு மனு அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியது:
கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற 10-ஆம் வகுப்பு ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வு வினாத்தாள் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண் வினா பிரிவில் வினா எண்கள் 2, 9 ஆகியவையும், பொருத்துக பகுதியில் வினா எண் 16, அதன் உட்பிரிவுகள் பி, டி ஆகியவையும், 5 மதிப்பெண் வினாவான எண் 12 ஆகியவையும், மொழிமாற்றம் செய்யக் கூடிய பகுதியில் இருந்த வினா எண் 19 ஆகியவையும் மாணவர்களைக் குழப்பும் விதமாகவும், பாடத் திட்டத்துக்கு வெளியில் இருந்தும் இடம் பெற்றிருந்தன.
இதனால் மெல்லக் கற்கும் மாணவர்களும், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளானதுடன் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வினாக் குறிப்பு தயாரிக்கும் குழு மூலம் மேற்கண்ட வினாக்களுக்கு உரிய கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றார் அவர்.
Q No. 14 (a) less than ( d)eight times. Both answers are correct. Pl. Add this one with ur requestion letter. Thank you .
ReplyDeleteQ. No.14 (IV)
ReplyDelete