Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு விடைத்தாள் 16 முதல் திருத்தும் பணி.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, 16ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கியது
. திருப்பூர் மாவட்டத்தில், 81 மையங்களில் தனித்தேர்வர் உட்பட, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், இத்தேர்வை எழுதி வருகின்றனர். நாளை, அறிவியல்; 11ல் சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது. 13ல், விருப்ப பாடத்துடன், பொதுத்தேர்வு நிறைவடையும். திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில், விடைத்தாள் திருத்தும் பணி, 16ல் துவங்குகிறது; 16 மற்றும், 17ல் முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பயிற்சி வழங்கப்படும். 18 முதல், மொழித்தாள் பாட விடைத்தாள் திருத்தப்படும்; 1,500 உதவி தேர்வர்கள், இப்பணியில் ஈடுபடுவர். இம்மாதம், 1ல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி, 25க்குள் முடியும் என, ஏற்கனவே கூறப்பட்டது; 15 நாட்கள் தாமதமாக துவங்குவதால், பணி நிறைவடைய, கூடுதல் நாட்கள் தேவைப்படும். மே இரண்டாவது வாரத்தில், இப்பணி நிறைவடைய வாய்ப்புள்ளது. மே, 20க்கு பின், தேர்வு முடிவு வெளியாகலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive