பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், பிளஸ் 1 பாட கேள்வி இடம்பெற்றதால், பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று,
கணிதத் தேர்வு நடந்தது; வினாத்தாள் எளிதாக இருந்தது. ஆனால், வினாத்தாளில்
பல்வேறு பிழைகளும், பாடத்திட்டத்துக்கு வெளியில் உள்ள கேள்விகளும்
இடம்பிடித்தன. இந்த வகையில், மொத்தம், 22 மதிப்பெண்களுக்கு, மாணவர்கள்
பதிலளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இரண்டு மதிப்பெண்ணில், ஒரு வினா, பிளஸ் 1
பாடத்திட்டத்தில் உள்ளது. ஆனால், 10ம் வகுப்புக்கு தவறாக
கேட்கப்பட்டிருந்தது அதேபோல, 10 மதிப்பெண் வினா ஒன்றில், வினாவே
பிழையாக இருந்ததால், அதை புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.
நேற்றைய தேர்வில், 'சென்டம்' எடுக்கும்
மாணவர்கள் கூட, 80 மதிப்பெண் தான் எடுக்க முடியும் என்ற நிலை
ஏற்பட்டுள்ளது. எனவே, பிழையான வினா, பாடத்திட்டத்துக்கு வெளியே வந்த வினா
உள்ளிட்டவற்றுக்கு, போனஸ் மதிப்பெண் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
கணிதத் தேர்வில், மொத்தம், 47 வினாக்களில்,
10 மதிப்பெண்களுக்கான, 47வது வினாவில், '- 6' என்பதற்கு பதில், '- b' என்ற
ஆங்கில எழுத்து இடம் பெற்றதால், வினாவை மாணவர்கள் புரிந்து கொள்ள முடியாமல்
விட்டு விட்டனர்.
அதேபோல், 34ம் வினாவில், கூட்டுத்தொடரில்,
7வது உறுப்பின் என்ற வார்த்தைக்கு பதில், 7வது முறையின் என்று தவறாக
இடம்பெற்றுள்ளதால், அந்த வினாவும் மாணவர்களுக்கு புரியவில்லை.
இதேபோல, 44வது கேள்வி, பாடத்திட்டத்திலோ
புத்தகத்திலோ இல்லை. 26வது கேள்வியில், 'cos A+B, Sin A+B' ஆகியவற்றை
கண்டறிய குறிப்பிடப்பட்டுள்ளது.
தயவு செய்து தேவையில்லாத குழப்பங்களை உருவாக்காதீர்கள். 44வது மற்றும் 26வது கேள்விகள் தயாரிப்பு வினாக்கள். மாணவர்கள் புரிந்துதான் எழுத வேண்டும். 26வது கேள்வி புரிந்து கொண்டால் மிகவும் சுலபமானது.47 மற்றும் 34 வது கேள்விகள்தான் உண்மையிலேயே தவறானவை.
ReplyDeleteசமச்சீர் கல்வி முதல் முறை அறிமுகப்படுத்தினபோது 2 மற்றும் 5 மதிப்பெண் பகுதிகளில் தயாரிப்பு வினாக்கள் கட்டாய வினாக்களாகத்தான் இருந்தன. மேலும் 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் தாயரிப்பு வினாக்களாகத்தான் இருந்தன. உண்மையிலேயே அதுதான் சரியான முறை. 100% மதிப்பெண்கள் முதல் தேர்வில் அதிகமாக வரவில்லை என்பதை காரணம்காட்டி வினாத்தாள் வடிவமைப்பை மாற்றியது பள்ளிகல்வித்துறை செய்த மிகப்பெரிய தவறு. கல்வியாளர்களே மாணவர்களை 100% மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொள்ள தூண்டுவது நம் கல்விதுறையின் பொறுப்பற்ற முடிவுகள்தான். ஒரு மாணவன் 100% எடுத்தால் மட்டும்தான் புத்திசாலியா? 99% எடுத்தால் புத்திசாலி இல்லையா? சிந்தியுங்கள்.
ReplyDeletethis is correct method
ReplyDeleteQuestion no 26 is a creative one
ReplyDeleteAnd also easiest one
They given C is right angled therefore A+B always 90 so the answer is cos(A+B) = cos 90=0
And sin(90)=1
Question no 26 is a creative one
ReplyDeleteAnd also easiest one
They given C is right angled therefore A+B always 90 so the answer is cos(A+B) = cos 90=0
And sin(90)=1