Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

The upcoming Students must choose agricultural degrees


நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விவசாய கல்லூரியில் ஒரு நாள்தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்றனர்.



        1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் விவாசய கல்லூரிக்கு களப் பயணமாக  செல்லப்பட்டனர்.
கல்லூரி வணிக பிரிவு மேலாளர் தமிழரசன் அனைவரையும் வரவேற்றார்.கல்லூரி கல்வி தலைவர் ஐராணி சேது அவர்கள் தலைமை தாங்கினார் . கல்லூரி டீன் முனைவர்  பேபி ராணி ,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி டீன் பேசும்போது,இளம் மாணவர்களாகிய நீங்கள் இப்போதே விவாசய கல்லூரியில் சேருவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும்.விவாசயம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும்.பயிர் நிலங்கள் அழிந்து கொண்டே வருகின்றன.விவாசயம் செய்தால் நாடு தானாக முன்னேறும்.எல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான்.மாற்று வேளாண்மை செய்து கூடுதல் பயிர்களைவிவசாயம் செய்து மகசூல் அதிகரிக்க வேண்டும்.இயற்கை உரம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.மல்லிகை செடியில் நோயின் தாக்குதல் தெரிந்தால் மட்டுமே மருந்துதெளிக்க வேண்டும்.விவாசய கல்லூரியில் சேர்ந்து படிப்பதன் மூலம் நாட்டையும்,உங்களையும் நன்றாக வளர செய்ய இயலும்.இவ்வாறு அவர் பேசினார்.விவசாய கல்லூரியில் பார்வையிட்ட இடங்களை பற்றி மாணவிகள் சௌமியா ,பரமேஸ்வரி,கீர்த்தியா,ஜெயஸ்ரீ,திவ்யஸ்ரீ,ராஜேஸ்வரி,மாணவர்கள் வெங்கட்ராமன்,ஜீவா,வசந்த குமார் உட்பட பெற்றோர்களும்,ஆசிரியர்களும் பேசினார்கள்.கண்ணதாசன்,சுமித்ரா,பூவதி,யோகேஸ்வரன் உட்பட பல மாணவர்கள் விவசாயம் தொடபாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.கல்லூரி பண்ணை மேலாளர் சதீஷ் குமார், பேராசியர் மகேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.பள்ளியின் சார்பாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரும் சுற்றுலா செல்வது போல தனியார்  குளிர் வசதி கொண்ட  இரண்டு ஓம்னி பேருந்தில் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.கல்லூரியில் நான்கு குழுக்களாக மாணவ,மாணவியரை பிரித்து அவர்களுக்கு உதவியாக கல்லூரி பேராசிரியர்களும்,கல்லூரி மாணவர்களும் வழிகாட்டுதலுடன் பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.பேராசிரியர்கள் உதவியுடன் மாணவ,மாணவியர்க்கு வெண்டைக்காய் பறிக்க கற்று கொடுக்கப்பட்டது.மாணவர்களை  வைத்து எடை போட செய்து விவாசயம் தொடர்பாக நேரடியாக செயல் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.இக்கல்லுரி 240 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ளது.இங்கு இயற்கை விவசாயம் கடைபிடிக்கபடுவதை மாணவர்களுக்கு விரிவாக எடுத்து சொல்லப்பட்டது.இயற்கை வேளாண்மை முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிடபட்டதையும் விளக்கமாக சொல்லப்பட்டது.எண்ணெய் வித்துப் பயிர்களான எள்,நிலக்கடலை ,சூரிய காந்தி,தென்னை,பூக்களில் முக்கியமாக மல்லிகை,பல மரங்களில் மா,பலா,வாழை மற்றும் மாதுளை,மேலும்சந்தனம்,தேக்கு,செம்மரம்,வாகை,புங்கம்,வேம்பு,இலுப்பை,புளி,வெப்பாலை போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் பயிரிடபட்டுள்ளதை மாணவர்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டது.  1 முதல் 8 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரையும் அவர்கள் கையால் செடிகளை கொடுத்துநட செய்ய சொன்னார்கள்.மாணவ ,மாணவியரும் சந்தோசமாக செடிகளை நட்டனர்.பன்றி வளர்ப்பு,ஆடு வளர்ப்பு,மாடு வளர்ப்பு,பால் தரும் பசுக்கள்,கோழி இனங்களில் கினி கோழி ,வான் கோழி,நாட்டு கோழி,புறா,முயல்,வாத்து போன்றவை ஒருங்கிணைந்த பண்ணை முறையில் வளர்க்க படுவதை விரிவாக ,நேரடியாக விளக்கப்பட்டது.கல்லூரி டீனுடன் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விவாசயம் தொடர்பான கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றனர்.மாணவர்களின் கேள்விகளும்,டீன் பதில்களும் ;
சௌமியா : வெள்ளை பன்றி வளர்ப்பதால் என்ன பயன் ?
டீன் : விவாசயம் தொடர்பான பணிகளுக்கும்,உணவுக்காகவும் பன்றிகள் வளர்க்கபடுகின்றன.பன்றிகள் அதிக குட்டிகளை ஈனும்.நிறைய மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.அதற்கு தான் வெள்ளை பன்றிகள் வளர்க்கபடுகின்றன.
பரமேஸ்வரி: வேளாண்மையில் என்ன,என்ன படிப்புகள் உள்ளன?
டீன் : இளங்கலை பட்டம்,முதுகலை பட்டம்,டிப்ளோம படிப்பு,ஆராய்ச்சி படிப்பு என வேளாண்மையில் பல்வேறு படிப்புகள் உள்ளன.வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆகும்.இது தான் எல்லா தொழிலுக்கும் முன்னோடி .அனைத்து நாடுகளுக்கும் வேளாண்மை தேவை.பயிர் நிலங்கள் அழிந்து கொண்டே வருகின்றன.இடைக்காலத்தில் 20 வருடங்களாக சரியான மழை  இல்லை.நிலம் சரியாக உலுவதில்லை.அடுத்து தொழில். நிலம் தரிசாகி விடும்.விவசாயத்தின் வாயிலாக கோடிக்கணக்கான வருவாய் கிடைக்கும்.எனவே நீங்கள் அனைவரும் வருங்காலத்தில் விவசாயம் செய்ய முன்வரவேண்டும்.அதனை குறிகோளாக எடுத்துகொள்ள வேண்டும்.
கண்ணதாசன் : மாற்று வேளாண்மை என்றால் என்ன ?
டீன் : சில இடங்களில் கால்வாய் பாசனம் இருக்கும்.நிலத்தில் பயிரை மாற்றி,மாற்றி விவசாயம் செய்தால் மகசூல் கூடும்.தண்ணீர் குறைவாக செலவு செய்தால் போதுமானது.
சுமித்ரா: மல்லிகை செடிக்கு எத்துனை நாளைக்கு ஒரு முறை மருந்து தெளிக்கபடுகிறது ?
டீன் : மருந்து தெளிப்பது என்பது பூச்சியின் தாக்குதல்,நோயின் தாக்குதல் இருந்தால் மட்டுமே தேவை.எத்துனை நாள்  ஒரு முறை மருந்து தெளிப்பது என்பது நோயின் தாக்கத்தை பொருத்து மட்டுமே அமையும்.
பூவதி : இயற்கை உரம் ,செயற்கை உரம் என்றால் என்ன?
டீன் : இயற்கை உரம் என்பது மக்கிய தொழு உரம் ஆகும்.எரு  தயாரிப்பது உரம் ஆகும்.எப்போதுமே இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மண் இறுக்கமாக இருந்தால் மட்டுமே ,சத்து பற்றா குறை இருக்கும் நேரமே செயற்கை உரம் போட்டால் மண் இளக்கம் கொடுத்து நன்றாக பயிர் வளரும்.
இவ்வாறு மாணவ ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.1ம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர் இது போன்று கல்லூரிக்கு வருவது இதுவே முதல் முறை என்றும் ,இது தங்களின் வாழ்க்கையில் முடியாத சந்தோசம் என்றும் கூறினார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive