ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் செயற்கைக் கோள் வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பெருமை கொள்கிறோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின்
கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை
4 மணியளவில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோள்,
பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார்
ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது.
அதன்படி ஏற்கனவே 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.
இப்போது 1,425 கிலோ எடை கொண்ட 6-ஆவது செயற்கைக்கோளான
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எஃப், பி.எஸ்.எல்.வி. சி32 ராக்கெட் மூலம் ஆந்திர
மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்
இருந்து இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவியது இஸ்ரோ.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...